இரத்தினபுரி மாவட்டத்தில் எலிக் காய்ச்சல் பரவும் அபாயம்

இதுவரை 9 பேர் மரணம்

இரத்தினபுரி மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் மிகவும் தீவிரமடைந்துள்ளது. இதனால் 9 பேர் உயிரிழந்துள்ளதாக சப்ரகமுவ மாகாண சுகாதார அத்தியட்சகர் லக்மால் கோணார தெரிவித்தார்.

எலிக்காய்ச்சல் தொடர்பில் நேற்றுமுன்தினம் ஊடகங்களுக்கு தகவல் வழங்குகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இவ்விடயமாக அவர் தொடர்ந்து தகவல் தருகையில்,

2019ஆம் ஆண்டு முதல் ஏழு மாதங்களில் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1250 ஆக காணப்பட் ட போதிலும் 2020 ஆம் ஆண்டு முத ல் 7 மாதங்களில் மாத்திரம் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1085 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்று நோய் அச்சுறுத்தல் நிலவிய காலத்தில் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் நிலவியதாக இதன்போது தெரிவிக்கப்படுகின்றது.

கொரோனா தொற்று ஏற்பட்ட காலப்பகுதியில் பொதுமக்கள் தொழில் வாய்ப்புகளுக்கு செல்லாமல் வீடுகளில் முடங்கிக் கிடந்தமையினால் பொது மக்கள் விவசாயக் கமத்தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டதன் எலியின் எச்சங்கள் மூ லம் இக்காய்ச்சல் பரவுகின்றது. அத்துடன் இரத்தினபுரி மாவட்டத்தில் விவசாய வயல்கள் ,கமத் தொழில் நிலங்கள் மற்றும் கைவிடப்பட்ட இரத்தினக்கல் குழிகள் ஆகியவற்றின் அண்மித்த பகுதிகளில் எலிக்காய்ச்சல் அதிகமாக பரவி வருவதாக இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

(இரத்தினபுரி சுழற்சி நிருபர்)

Fri, 08/28/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை