போலி தகவல் கூறிய டிரம்ப் மீது பேஸ்புக், ட்விட்டர் நடவடிக்கை

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து சிறுவர்களுக்கு கிட்டத்தட்ட முழு எதிர்ப்புச் சக்தி உள்ளது என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட கருத்தை அடுத்து பேஸ்புக் மற்றும் ட்விட்டர் நிறுவனங்கள் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளன.  

‘பொக்ஸ் நியுஸ்’ தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில் கூறிய இந்த கருத்தை வேஸ்புக் நீக்கி உள்ளது. கொரோனா வைரஸ் தொடர்பில் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் தவறான தகவல் என்று இதனை பேஸ்புக் குறிப்பிட்டுள்ளது.  

இதே வீடியோ பதிவை அகற்றாத பட்சத்தில் டிரம்பின் தேர்தல் பிரசார கணக்கை முடக்குவதாக ட்விட்டர் குறிப்பிட்டுள்ளது. 

கொவிட்–19இல் இருந்து சிறுவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி இல்லை என்று அமெரிக்க பொது சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.  

 “எந்த ஒரு குழுவும் கொவிட்–19 தொற்றியில் இருந்து நோய் எதிர்ப்புச் சக்தியை கொண்டிருக்காத நிலையில் இந்த வீடியோ தவறான கூற்றை உள்ளடக்கி இருப்பதோடு அது பாதகம் கொண்ட கொவிட் தவறான தகவல் தொடர்பில் எமது கொள்கையை மீறுவதாக உள்ளது” என்று பேஸ்புக் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.  

டிரம்பின் பேஸ்புக் பதிவு நீக்கப்பட்டது தொடர்பில் வெள்ளை மாளிகை உடனடியாக எந்தத் தகவலும் வெளியிடவில்லை. 

எனினும் பொய்த்தகவல் குறித்த விதிமுறைகளை மீறியதன் பேரில் ஜனாதிபதி டிரம்பின் பதிவுகளை பேஸ்புக் அகற்றியது இதுவே முதல்முறையாகும்.    

Fri, 08/07/2020 - 10:34


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை