கொரோனா தொற்று: தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பிலிப்பைன்ஸில் பெரும் பாதிப்பு

தென்கிழக்கு ஆசியாவில் கொவிட்–19 வைரஸ் தொற்றால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடாக பிலிப்பைன்ஸ் உருவெடுத்துள்ளது. 

நேற்று அங்கு புதிதாக 3,561 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியானதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தற்போது பிலிப்பைன்ஸில் 119,460 பேர் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த எண்ணிக்கை இந்தோனேசியாவை விட அதிகம். நோய்த் தொற்றால் பிலிப்பைன்ஸில் 2,150 பேர் உயிரிழந்துள்ளனர். நோய்ப்பரவல் அதிகரித்ததால் தலைநகர் மணிலாவிலும் அதைச் சுற்றியுள்ள மாநிலங்களிலும் மீண்டும் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.

கடந்த செவ்வாய்க்கிழமை நடைமுறைப்படுத்தப்பட்ட அந்தக் கட்டுப்பாடுகள் இரண்டு வாரம் நடப்பில் இருக்கும். கொரானா வைரஸ் தொற்றால் பிலிப்பைன்ஸின் பொருளாதாரம் இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டில் 16.5 வீதம் சுருங்கியுள்ளது.    

Fri, 08/07/2020 - 10:30


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை