பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு முஸ்லிம்கள் சார்பாக வாழ்த்து

சரித்திரம் படைத்துள்ள தலைவர்

பிரதமர் மஹிந்த ராஜபக்கஷவுக்கு முஸ்லிம் மக்கள் சார்பாக வாழ்த்து தெரிவிப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் போட்டியிட்டு பாராளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ள கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

இலங்கையின் 9ஆவது பாராளுமன்றத்தின் பிரதமராக சத்தியப் பிரமாணம் செய்துள்ள மஹிந்த ராஜபக்‌ஷக்கு பொறுப்புள்ள முஸ்லிம் சமூகத்தின் மக்கள் பிரதிநிதி  என்கின்ற வகையில் எனது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

Tue, 08/11/2020 - 13:15


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை