இரண்டு ஏவுகணைகளை செலுத்தி அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை

தென் சீனக் கடல் பகுதியில் சீனா இரண்டு இடைத்தொலைவு ஏவுகணைகளைப் பாய்ச்சியதாகத் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவை வெளிப்படையாக எச்சரிக்கும் வகையில் சீனா அவ்வாறு செய்திருப்பதாகக் கவனிப்பாளர்கள் கருதுகின்றனர். தனது இராணுவப் பயிற்சிகளை உளவுபார்க்க அமெரிக்கா விமானத்தை அனுப்பியதாக சீனா குற்றஞ்சாட்டியது. இந்நிலையில் நேற்று தென் சீனக் கடல் பகுதியில் இடைத்தொலைவு ஏவுகணைகள் பாய்ச்சப்பட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இதில் ஒன்று விமானதாங்கிக் கப்பலை அழிக்கக்கூடியது என்று செய்தி வெளியாகியுள்ளது.

இந்த இரு ஏவுகணைகளும் ஹய்னன் மாகாணம் மற்றும் பரசல் தீவுகளுக்கு இடையே ஏவப்பட்டுள்ளன.

தென்சீனக் கடலுக்கு சீனா உரிமை கொண்டாடுவது தொடர்பாக அமெரிக்கா எதிர்ப்புத் தெரிவித்து வருவதால் இரு நாடுகளுக்கும் இடையே உரசல் போக்கு உள்ளது.

Fri, 08/28/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை