காசாவில் முடக்கநிலை மூன்று நாட்கள் நீடிப்பு

பலஸ்தீனத்தின் காசா பகுதியில் கொரோனா வைரஸுக்கு எதிரான முடக்க நிலை நேற்று மேலும் மூன்று நாட்களுக்கு நீடிக்கப்பட்ட நிலையில் பள்ளிவாசல்கள், பாடசாலைகள் மற்றும் வர்த்தகங்கள் தொடர்ந்து மூடப்பட்டு அத்தியாவசிய தேவைக்கு மாத்திரமே மக்கள் வெளியேற அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பொதுமக்களிடையே நோய்த் தொற்று கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து இந்தவார ஆரம்பத்தில் காசாவில் 48 மணி நேர ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது. அது தொடக்கம் இரு தொற்றாளர்கள் உயிரிழந்ததோடு 20 நோய்த் தொற்று சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டன. அவர்களில் சிலர் பிரதான வைத்தியாசலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஏற்கனவே எகிப்து மற்றும் இஸ்ரேலின் நீண்டகால முற்றுகையில் அவதியுறும் காசாவின் இரண்டு மில்லியன் மக்கள், நாளொன்றில் ஒரு சில மணி நேரமே மின்சாரத்தை பெற்று வருகின்றனர் என்று உதவி நிறுவனங்கள் குறிப்பிட்டுள்ளன.

Fri, 08/28/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை