அமெரிக்காவில் பலத்த சூறாவளி

அமெரிக்காவின் லூசியானா மாநிலத்தில் மிக ஆபத்துக் கொண்ட 4ஆம் கட்ட லோரா சூறாவளி தாக்கியுள்ளது.

உயிர்தப்ப முடியாத சூறாவளி என்று வர்ணிக்கப்பட்டிருக்கும் இந்த சூறாவளி டெக்சாஸ்–லூசியானா எல்லைக்கு அருகில் பேரழிவுகளை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது.

லூசியானாவின் கெமரோனில் இந்த சூறாவளி கரையை தொட்டதாக தேசிய சூறாவளி மையம் குறிப்பிட்டுள்ளது. மணிக்கு 240 கிலோமீற்றர் வேகத்தில் நிலையாக வீசும் இந்த சூறாவளி இந்த ஆண்டில் அமெரிக்காவை தாக்கும் பலத்த சூறாவளி என அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதனை ஒட்டி ஆறு மீற்றர் (20 அடி) உயரத்தில் கடல் அலைகள் எழும் வாய்ப்பு இருப்பதால் கரையோரம் இருக்கும் ஒட்டுமொத்த குடியிருப்புகளும் மூழ்கும் ஆபத்து உள்ளது.

டெக்சாஸ் மற்றும் லூசியானாவில் 290,000க்கும் அதிகமான வீடுகள் மற்றும் வர்த்தகங்கள் மின்சாரம் இன்றி காணப்படுகின்றன.

 

Fri, 08/28/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை