அமெரிக்க – ரஷ்ய இராணுவ வாகனங்கள் சிரியாவில் ஒன்றோடொன்று மோதி விபத்து

வட கிழக்கு சிரியாவில் ரஷ்ய மற்றும் அமெரிக்க இராணுவ வாகனங்கள் மோதி பல அமெரிக்க துருப்புகளும் காயமடைந்த சம்பவம் தொடர்பில் இரு அரசுகளும் பரஸ்பரம் குற்றம்சாட்டி வருகின்றன.

ரஷ்ய இணைதளத்தில் இந்த விபத்து நிகழும் வீடியோ பதிவேற்றப்பட்டிருப்பதோடு அது பரந்த அளவில் பகிரப்பட்டுள்ளது.

ரஷ்ய ஹெலிகொப்டர் ஒன்று தழ்வாக பறக்க, பாலைவனத்தில் தொடரணியாகச் சென்ற ரஷ்ய இராணுவ வாகனம் ஒன்று அமெரிக்காவின் கவச வாகனத்தில் மோதுவது அந்த வீடியோவில் காணமுடிகிறது.

அமெரிக்கா ரோந்து நடவடிக்கைக்கு இடையூறு செய்ததாக ரஷ்யா குற்றம்சாட்டியுள்ளது. குறித்த பகுதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபடுவது பற்றி அமெரிக்க இராணுவத்தை முன்கூட்டியே அறிவுறுத்தி இருந்ததாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

“தற்போதிருக்கும் உடன்படிக்கையை மீறி அமெரிக்கப் படையினர் ரஷ்ய ரோந்துப் பணியை தடுக்க முயற்சித்தனர்” என்று அமைச்சு வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் ரஷ்ய வாகனம் விபத்தை ஏற்படுத்தி அமெரிக்க படையினரை காயப்படுத்தியதாக வெள்ளை மாளிகை பாதுகாப்பு கெளன்சில் தெரிவித்துள்ளது.

இஸ்லாமிய அரசு குழுவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் வகையில் குறித்த பகுதியில் சுமார் 500 அமெரிக்க துருப்புகள் நிலைகொண்டுள்ளன.

Fri, 08/28/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை