தென்கொரியாவில் கொரோனா நோய்த் தொற்று அதிகரிப்பு

பாராளுமன்றத்திற்கும் பூட்டு

தென் கொரியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 441 புதிய கொரோனா வைரஸ் தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

கடந்த மார்ச் 7 ஆம் திகதிக்குப் பின்னர் அந்நாட்டில் ஒருநாளில் பதிவான அதிக நோய்த் தொற்று சம்பவமாக இது உள்ளது.

இந்த புதிய தொற்று சம்பவங்களில் 434 பேர் உள்நாட்டில் நோய்ப் பரவலுக்கு உள்ளாகி இருப்பதோடு தலைநகர் சோலில் இருந்து 313 பேர் அடையாளம் காணப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

சோலில் இருக்கும் சரங் ஜெயில் தேவாலயத்துடன் தொடர்புபட்ட கொத்தணி ஒன்றில் இருந்து தற்போது 900க்கும் அதிகமான நோய்த் தொற்று சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

சீனாவின் வூஹான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்றின் ஆரம்பக் கட்டத்தில் அதனை வெற்றிகரமாக கட்டுப்படுத்திய நாடுகளில் ஒன்றாக தென் கொரிய இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் செய்தியாளர் ஒருவருக்கு நோய்த்தொற்று உறுதிப்படுத்தப்பட்டதால் நேற்று தென் கொரிய பாராளுமன்றம் மூடப்பட்டது.

வைரஸ் பரவலை முறியடிக்கும் நடவடிக்கைகள் தொடர்பில் நடைபெற்ற பாராளுமன்ற அவசரக் கூட்டத்தில் அதுபற்றி முடிவெடுக்கப்பட்டது.

தலைவரும் அதிகாரிகள் சிலரும் பங்கேற்ற தென் கொரிய ஆளுங்கட்சியின் உச்சமன்றக் கூட்டத்தில் செய்தி சேகரிப்பதற்காக அந்தச் செய்தியாளர் சென்றிருந்தார்.

Fri, 08/28/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை