பொதுஜன பெரமுன அமோக வெற்றி

ஒன்பதாவது பாராளுமன்றத்திற்கு 225 உறுப்பினர்களை தெரிவு  செய்வதற்கான பொதுத் தேர்தலில் மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான பொதுஜன பெரமுன  வரலாற்று ரீதியான வெற்றியை வசப்படுத்திக் கொண்டு முன்னணியில் திகழ்கிறது. 

இதுவரை வெளியிடப்பட்டுள்ள தேர்தல் முடிவுகளின்படி ஸ்ரீலங்கா  பொதுஜன பெரமுன முன்னணியில் திகழ்கிறது.நேற்று இரவு 11.00 மணிரையில்  வெளியிடப்பட்ட தேர்தல் முடிவுகளுக்கிணங்க நுவரெலியா அனுராதபுரம் பதுளை,  காலி, மாத்தறை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் பொது ஜன பெரமுன அமோக  வெற்றியீட்டியுள்ளது.

அதன்படி ஆறு  மாவட்டங்களில் தபால் வாக்குகள் முடிவும் 32 தேர்தல் தொகுதிகளுக்கான  முடிவும் அறிவிக்கப்பட்ட நிலையில் பொது ஜன பெரமுன 5,938,236 வாக்குகளை  பெற்றுக்கொண்டுள்ளது அது 58.65 வீதமாகும்.

இம்முறை  தேர்தலில் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி  2,397,157வாக்குகளைப் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளதுடன் அது 23.68வீதமாக  உள்ளது. அதேவேளை அநுர குமார் திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி  379,700வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ள நிலையில் அது 3.75 வீதமாகும்.

அதேவேளை இலங்கை தமிழரசுக்கட்சி 320,862வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளது அது 3.17விதமாக உள்ளது.

நாட்டில்  பிரபல கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி இம்முறை 210,626வாக்குகளைப் பெற்று 5  ஆவது இடத்தில் உள்ளது. அக்கட்சி பெற்றுக்கொண்ட வாக்குகளின் படி அது  2.08 வீதமாகும்.

இதுவரை வெளியிடப்பட்டுள்ள தேர்தல் முடிவுகளின்படி  மற்றும் உறுதிப்படுத்தாத பெறுபேறுகளின் படியும் ஐக்கிய தேசிய கட்சி மற்றும்  ஐக்கிய மக்கள் கட்சி ஆகியவற்றின் முக்கியமான உறுப்பினர்கள் பலர் தமது  பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளை இழந்துள்ளமையைக் காணமுடிகிறது.

அதேவேளை பொதுஜன பெரமுனவின் சார்பில் இம்முறை தேர்தலில் புதிதாக போட்டியிட்ட பலர் பெரும் வெற்றி பெற்றுள்ளனர்.

196  உறுப்பினர்களை தெரிவு செய்யும் வகையில் ஒன்பதாவது பொதுத்தேர்தல்  நேற்றுமுன்தினம் நடைபெற்றது. நேற்று முன்தினம் தேர்தல் வாக்களிப்பு  இடம்பெற்ற நிலையில் நேற்று காலை முதல் வாக்களிப்பு நடவடிக்கைகள்  ஆரம்பமாகின.

அதற்கிணங்க நேற்று இரவு வரை பெருமளவிலான தேர்தல் முடிவுகள்  வெளியாகி இருந்தன. அதற்கிணங்க பொது ஜன பெரமுன பாரிய வாக்கு வித்தியாசத்தில்  முன்னணியில் திகழ்கின்றது.

நாட்டில் நிலவும் கொரோனா வைரஸ்  அச்சுறுத்தல் சூழ்நிலையில் சுகாதாரத் துறையினர் இன் வழிகாட்டலைப் பின்பற்றி  அனைத்து தேர்தல் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன அந்தவகையில்  நேற்று இந்த பத்திரிகை அச்சுக்குப் போகும் வரையில் தேர்தல் முடிவுகள்  தொடர்ச்சியாக வெளியிடப்பட்டு கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. காலி  மாவட்டத்தில் வெற்றியீட்டியுள்ள பொதுஜன பெரமுன 7 ஆசனங்களை பெற்றுக்  கொண்டுள்ளதுடன் ஐக்கிய மக்கள் சக்தி இரண்டு ஆசனங்களை மாத்திரமே பெற்றுக்  கொண்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சி மற்றும் தேசிய மக்கள் சக்தி ஆகியவை காலி  மாவட்டத்தில் எந்த ஒரு ஆசனத்தையும் பெற்றுக் கொள்ளவில்லை. 

மாத்தறை மாவட்டத்தில் பொதுஜன பெரமுன 06 ஆசனங்களைப்  பெற்றுக்கொண்டுள்ள அதேவேளை ஐக்கிய மக்கள் சக்தி ஒரு ஆசனத்தை மாத்திரமே  பெற்றுக் கொண்டுள்ளது. 

ஐக்கிய தேசிய கட்சிக்கு மாத்தறை மாவட்டத்தில் எந்த ஒரு  ஆசனமும் கிடைக்கவில்லை.அதற்கிணங்க பொது ஜன பெரமுன மாத்தறை மாவட்டத்தில்  3,52, 217 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது 

ஐக்கிய மக்கள் சக்தி அந்த மாவட்டத்தில் 72 ,740 வாக்குகளை மாத்திரமே பெற்றுக்கொண்டுள்ளது. 

மொனராகலை மாவட்டத்தில் பொதுஜன பெரமுன ஐந்து ஆசனங்களை பெற்றுக்  கொண்டுள்ளதுடன் அந்த மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி ஒரே ஒரு ஆசனத்தை  மட்டுமே பெற்றுக்கொண்டுள்ளது.  நுவரெலிய மாவட்டத்தில் பொதுஜன பெரமுன 2,30,389 வாக்குகளைப்  பெற்றுக் கொண்டுள்ளதுடன் ஐக்கிய மக்கள் சக்தி 1,32,008 வாக்குகளை  பெற்றுக்கொண்டுள்ளது.

அத்துடன் அந்த மாவட்டத்தில் சுயேட்சைக் குழு 17,107  வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

அனுராதபுரம் மாவட்டத்தில் அனைத்து தேர்தல் தொகுதிகளையும் பொது  ஜன பெரமுன வெற்றி கொண்டுள்ளது.

அந்த மாவட்டத்தில் பொதுஜன பெரமுன 3,44,458  வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளதுடன் ஐக்கிய மக்கள் சக்தி 1,19,788 வாக்குகளை  பெற்றுக்கொண்டுள்ளது. 

பதுளை மாவட்டத்தில் பொது ஜன பெரமுன 3,09,538 வாக்குகளை  பெற்றுக்கொண்டுள்ளதுடன் ஐக்கிய மக்கள் சக்தி அந்த மாவட்டத்தில் 1,44,290  வாக்குகளையும் தேசிய மக்கள் சக்தி 1,930 வாக்குகளையும்  பெற்றுக்கொண்டுள்ளது. 

நாட்டின் தேர்தல் வரலாற்றில் மிகக் குறுகிய காலத்தில் கட்சி  ஒன்றை உருவாக்கி பாராளுமன்றத் தேர்தலில் வரலாற்று வெற்றியை  பெற்றுக்கொள்ளும் கட்சியாக பொதுஜன பெரமுன அரசியல் அரங்கில் தம்மை பதிவு  செய்துகொள்கிறது.  

அதற்கிணங்க முழுமையான தேர்தல் முடிவுகள் வெளியாகும் போது  பொது ஜன பெரமுன மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக் கொள்ளும் என்ற  நம்பிக்கை உறுதியாகியுள்ளது.  

நேற்று இரவு எட்டு மணி வரையிலான தேர்தல் முடிவுகளின்படி 10  மாவட்டங்களில் தபால்மூல வாக்குகள் முடிவு அறிவிக்கப்பட்ட நிலையில் பொது ஜன  பெரமுன 15,40,623 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது. அது 62.74 வீதமாகும்  

இம்முறை தேர்தலில் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள்  சக்தி 4,96,456 வாக்குகளைப் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளதுடன் அது 20.22  வீதமாக உள்ளது. அதேவேளை அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள்  சக்தி 1,06,763 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ள நிலையில் அது 4.35  வீதமாகும்.  

அதேவேளை இலங்கை தமிழரசுக்கட்சி 86, 639 வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்திலுள்ளது. அது 3.53 வீதமாக உள்ளது.  

நாட்டில் பிரபல கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி இம்முறை 48,  432 வாக்குகளைப் பெற்று 05 ஆவது இடத்திலுள்ளது.

அக்கட்சி பெற்றுக்கொண்ட  வாக்குகளின் படி அது 1.97 வீதமாகும்.  

இதுவரை வெளியிடப்பட்டுள்ள தேர்தல் முடிவுகளின்படி மற்றும்  உறுதிப்படுத்தாத பெறுபேறுகளின் படியும் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி கட்சி ஆகியவற்றின் முக்கியமான உறுப்பினர்கள் பலர் தமது பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளை இழந்துள்ளமையைக் காணமுடிகிறது. அதேவேளை பொதுஜன பெரமுனவின் சார்பில் இம்முறை தேர்தலில் புதிதாக போட்டியிட்ட பலர் பெரும் வெற்றியை பெற்றுள்ளனர்.  

196 உறுப்பினர்களை தெரிவு செய்யும் வகையில் ஒன்பதாவது  பொதுத்தேர்தல் நேற்றுமுன்தினம் நடைபெற்றது.

நேற்று முன்தினம் தேர்தல்  வாக்களிப்பு நடைபெற்ற நிலையில் நேற்று காலை முதல் வாக்கெண்ணும் நடவடிக்கைகள் ஆரம்பமாகின.

அதற்கிணங்க நேற்று இரவு வரை பெருமளவிலான தேர்தல்  முடிவுகள் வெளியாகியிருந்தன. இதன்படி பொது ஜன பெரமுன பாரிய வாக்கு வித்தியாசத்தில் முன்னணியில் திகழ்கின்றது. நாட்டில் நிலவும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் சூழ்நிலையில் சுகாதாரத் துறையினரின் வழிகாட்டலைப் பின்பற்றி அனைத்து தேர்தல் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் நேற்று இந்த  பத்திரிகை அச்சுக்குப் போகும் வரையில் தேர்தல் முடிவுகள் தொடர்ச்சியாக வெளியிடப்பட்டு கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

லோரன்ஸ் செல்வநாயகம்  

Fri, 08/07/2020 - 07:37


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை