30 வீதமானவர்களுக்கு அறிகுறி இன்றி தொற்று

தென் கொரியாவில் புதிதாய் வைரஸ் தொற்றுக்கு ஆளானவர்களில் 30 வீதத்தினருக்கு அறிகுறி ஏதும் தென்படவில்லை என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

அதனால், வைரஸ் பரவலைக் கண்காணித்து முறியடிப்பது தொடர்பில் கவலை அதிகரித்துள்ளது. நோய்த்தொற்றுக்கான அறிகுறி இருப்பவர்களைப் போலவே, எந்த அறிகுறியும் இல்லாதவர்களிடமும் வைரஸ் அதே அளவில் உள்ளன என்பதற்கு உறுதியான சான்றுகள் ஆய்வில் கிடைத்துள்ளன.

வைரஸ் தொற்றுக்கு ஆளாகி, அறிகுறிகள் ஏதும் இறுதிவரை தென்படாமலேயே குணமடைவோர் ஒரு வகையினர். ஆரம்பத்தில் அறிகுறி இல்லாவிட்டாலும் நாளடைவில் வெளிப்படையாகவே உடல்நலம் குன்றுவோர் வேறு வகையினர்.

இந்த இருதரப்பினருக்கும் இடையிலான வேறுபாட்டைத் தெளிவாகப் புரிந்துகொள்ளவும் அண்மைய ஆய்வு உதவியுள்ளது.  

Sat, 08/08/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை