2021 ஜுலை மாதம் வரை பேஸ்புக் ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை

கொவிட்-19 நோய்ப்பரவல் காரணமாகத் தனது பணியாளர்கள், அடுத்த ஆண்டு ஜூலை மாதம்வரை வீட்டிலிருந்தே வேலை செய்யலாம் என்று பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அலுவலகப் பணிகளை வீட்டிலிருந்து மேற்கொள்ளத் தேவையான வசதிகளை அமைத்துக்கொள்ள பணியாளர்களுக்கு சுமார் 1,000 டொலர் வழங்கப்படும்.

இருப்பினும் அரசாங்க அறிவிப்பைப் பொறுத்து சுமார் 2 மாதங்களாக வைரஸ் பரவல் கட்டுக்குள் இருக்கும் பகுதிகளில் உள்ள அலுவலகங்கள் மீண்டும் திறக்கப்படும் என்று பேஸ்புக் கூறியது.

ஆனால் அமெரிக்கா, லத்தீன் அமெரிக்கா ஆகியவற்றில் உள்ள பல அலுவலகங்கள் இந்த ஆண்டு இறுதி வரை திறக்கப்பட மாட்டாது என்று அது குறிப்பிட்டது.

அங்கு அதிக அளவிலான கொவிட்-19 சம்பவங்கள் பதிவாகி வருவதை அது சுட்டிக்காட்டியது.

ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்யும் நடைமுறையை ஏற்கெனவே கூகுள், ட்விட்டர் உள்ளிட்ட பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் நீட்டித்துள்ளன.

அந்த நிறுவனங்களின் வரிசையில் பேஸ்புக் இப்போது சேர்ந்துள்ளது.

 

Sat, 08/08/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை