'அங்கொட லொக்கா' மரணம்; 2 பெண்கள் உட்பட மூவர் கைது

பிரதீப் சிங் என்ற பெயரில் இந்தியாவில் வாழ்ந்தார்

கோயம்புத்தூர் பொலிசார் தீவிர விசாரணை “அங்கொட லொக்கா” என்றழைக்கப்படும் லசந்த சந்தன பெரேரா என்பவர் இந்தியாவில் உயிரிழந்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

மனிதப் படுகொலைகள், கப்பம் பெறுதல், ஹெரோயின் கடத்தல் உட்பட பாதாள உலக சம்பவங்கள் பலவற்றுடன் தொடர்புடையவரான இவர் இந்தியாவில் உயிரிழந்துள்ளதாக கோயம்புத்தூர் பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அந்த செய்திகள் தெரிவிக்கின்றன்.

இது தொடர்பாக நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ், தி ஹிந்து பத்திரிகைகள் இந்த செய்தியை நேற்று வெளியிட்டுள்ளன.

இந்த செய்தி பத்திரிகைகளில் அறிக்கையின்படி அங்கொட லொக்கா என்பவர் இந்தியாவில் ஆர் பிரதீப் சிங் என்ற பெயரில் இந்திய பிரஜையாக இருந்துள்ளார். அவருக்கு இந்தியாவில் அடையாள அட்டையும் இருந்துள்ளது. அதில் அவரது வயது 35 என குறிப்பிடப்பட்டுள்ளது. இவரது மரணம் கடந்த ஜூலை மூன்றாம் திகதி இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவரது மரணத்தின் பின்னர் போலி ஆவணங்கள் தயாரித்து அவரது உடல் மதுரையில் தகனம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் இரண்டு பெண்கள் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் ஒருவர் இலங்கைப் பெண் என்றும் அந்த நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன

பத்திரிகைகளில் வெளிவந்துள்ள செய்திகளின்படி கோயம்புத்தூர் போலிசார் சந்தேக நபர்கள் 3 பேரையும் நேற்று முன்தினம் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் ஒருவர் அங்கொட லொக்கா என்பவருக்கு அடையாள அட்டை மற்றும் பிரதீப் சிங் என்ற பெயருடைய ஆவணங்களை தயாரித்து கொடுத்தவரென்பதும் அந்த செய்திகள் குறிப்பிடுகின்றன.அங்கொட லொக்கா ஜூலை நேற்று இரவு மயக்கமுற்ற நிலையில் கோயம்புத்தூர் வைத்தியபீட ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போதும் அவர் இறந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

இதனை அடுத்து மாரடைப்பின் காரணமாக இவர் இறந்துள்ளாரென போலி ஆவணங்கள் தயாரித்து அதன்பின் அவரது சடலம் அங்கிருந்து எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் பத்திரிகைச் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆர் பிரதீப் சிங் என்று குறிப்பிடப்பட்டுள்ள நபர் கோயம்புத்தூரில் உள்ள களப்பட்டி வீதியில் சேரன் மாநகர் பிரதேசத்தில் கிரீன் கார்டன் என்ற பகுதியில் வசித்து வந்துள்ளார்.

இவரது சடலத்தை ஆஸ்பத்திரியிலிருந்து அவரது உறவினர்கள் என கூறிக்கொண்டு இந்த சந்தேக நபர்கள் 03 பேரும் பெற்றுக்கொண்டுள்ளனர். மாரடைப்பு காரணமாக மயக்கமுற்றார் என ஆஸ்பத்திரியில் இவர்கள் தெரிவித்துள்ளனர்.

இவருக்கு போலி ஆவணங்கள் தயாரித்து வழங்கிய சிவகாமசுந்தரி வயது 36 ஈரோடு எஸ். டி. ஆர். ஈஸ்வரன் மற்றும் அவருடன் வசித்து வந்த அமானி தஞ்சை வயது 27 ஆகிய மூவருமே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவரது மரணம் தொடர்பாக கோயம்புத்தூர் போலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். அங்கொட லொக்காவுக்கு இந்தியாவில் அவரது இரண்டாவது மனைவி விஷம் கொடுத்து கொலை செய்துள்ளார் என்ற அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் என்றும் அந்த செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

Tue, 08/04/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை