சமூக ஊடகங்களில் சட்டவிரோத தேர்தல் பிரசார நடவடிக்கைகள்

 இதுவரை 3,444 முறைப்பாடுகள் --− பெப்ரல்

தேர்தல் பிரசாரங்கள் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடைந்த நிலையில் நேற்றுக் காலை வரை தேர்தல் சட்டங்களை மீறிய வகையில் சமூக ஊடகங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்ட பிரசார நடவடிக்ைககள் தொடர்பாக 940 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி இது தொடர்பாக மேலும் கூறுகையில்,

கடந்த இரண்டு மாதங்களில், சமூக வலைத் தளங்களில் தேர்தல் சட்டங்களை மீறிய 3,444 சம்பவங்கள் தொடர்பாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

சுகாதார சட்டங்களை மீறி

தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டமை தொடர்பாக 2,483 முறைப்பாடுகளும் மேலும் வெறுக்கத்தக்க பேச்சு தொடர்பாக 30 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றன.

அத்துடன் 75 துன்புறுத்தல் சம்பவங்கள் மற்றும் 45 பெண் வேட்பாளர்கள் தவறாக சித்தரிக்கப்பட்டமை தொடர்பிலும் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றன என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tue, 08/04/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை