வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப தயார்

ஐ.தே.க தலைவர் ரணில்

2001,2015,2019 இல் வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை கட்டியயெழுப்பியது போன்று நாட்டை மீண்டும் கட்டியெழுப்பத் தயாராக இருப்பதாக ஐ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.தமது பொருளாதார திட்டத்தை சர்வதேச நிதி நிறுவனம் மற்றும் நட்பு நாடுகளினூடாக 6000 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெற்று இதனை செயற்படுத்துவதாகவும் அவர் கூறினார். அம்பாறையில் நடைபெற்ற ஐ.தே.க பிரசாரக் கூட்டமொன்றில் உரையாற்றிய அவர்,

மிளகாய்,வெங்காயம் தவிர்ந்த ஏனைய உணவுப் பொருட்களில் நாடு தன்னிறைவு கண்டுள்ளது. இது கூட தெரியாமல் நாட்டின் உணவுகளில் தன்னிறைவு அடையச் செய்வதாக அரசாங்கம் கூறி வருகிறது.

இரண்டாவது உலக யுத்தத்தின் பின்னர் பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பொருளாதார திட்டம் எதுவுமின்றி அரசாங்கம் ஏதேதோ கூறி வருகிறது.

உலக சந்தையில் எரிபொருள் விலை குறைந்துள்ளது. ஆனால் பாவனையாளர்கள் செலுத்தும் தொகை குறையவில்லை. இதன் பயனை அரசாங்கம் பெறுகிறது.

விவசாய உற்பத்திகளை சந்தைப்படுத்துவதற்கு வலையமைப்பொன்று உருவாக்கப்படும். விவசாய உற்பத்திகளை களஞ்சியப்படுத்துவதற்கு தமது ஆட்சியில் இரு களஞ்சியசாலைகளை ஆரம்பித்ததாகவும் அவர் கூறினார்.

தமது கட்சி விஞ்ஞாபனத்தில் உள்ளவற்றை முழுமையாக அமுல்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Fri, 07/24/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை