19ஆவது திருத்த சட்டத்தில் மாற்றம் ஒன்று அவசியமே

SLFP யாழ் முதன்மை வேட்பாளர் அங்கஜன் இராமநாதன்

தமிழ் மக்களுக்கு அரசாங்கம் தவறிழைத்தால் அரசாங்கத்துக்கு உள்ளே இருந்து கொண்டே அதற்கு எதிராக குரல் கொடுப்போம் என சிறிலங்கா சுதந்திர கட்சியின் யாழ்.மாவட்ட முதன்மை வேட்பாளர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.

தினகரனுக்கு வழங்கிய விசேட செவ்வியில், 19ஆம் திருத்தச் சட்டம் மற்றும் 13ஆம்  திருத்த சட்டம் என்பவற்றை நீக்க வேண்டும் என ஆட்சியாளர்கள் கூறுவது தொடர்பாக வினவியே போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும் அவர் கூறுகையில்,

19வது திருத்தச் சட்டத்தைப் பொறுத்தவரையில் உண்மையாகவே மாற்றம் ஒன்று தேவைப்படுகின்றது. கடந்த ஆட்சியில் ஜனாதிபதியும், பிரதமரும் வேறு வேறு கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி வந்த போது, மிகப் பெரிய முரண்பாடு ஏற்பட்டிருந்தது. நாடு முன்னோக்கிச் செல்லாது, இழுபறியில் நின்ற நிலையைக் கண்டோம்.

தற்போது அது சாத்தியமில்லை. அண்ணனும், தம்பியும் அரசாங்கம் நடத்துகின்றார்கள். எதிர்காலத்திற்காக, சில சட்டங்களை ஏற்படுத்த வேண்டிய தேவைகள் இருக்கின்றன. 13வது திருத்தச் சட்டத்தில் மாற்றங்கள் தான் இருக்கின்றன. ஆனால் அதனை முழுமையாக எடுப்பதாக எங்கும் சொல்லவில்லை.

மாகாண சபை முறைமை எவ்வளவு சாத்தியம் என்று தெரியவில்லை. அதை அகற்றுவற்கான நோக்கம் எதுவும் இல்லை.

எங்களுக்கும் சில மாற்றங்கள் தேவைப்படுகின்றன. காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் கேட்கின்றோம்.

மாற்றத்தைச் செய்யாது, அந்த அதிகாரங்களைப் பெற முடியாது. எந்த அதிகாரங்கள் தேவை என்பது பற்றி மக்களுடன் பேசித் தான் அதை மாற்ற இருக்கின்றோம். ஆனால், நாங்கள் நிச்சயமாக மக்கள் சார் பக்கம் தான் இருப்போம் என்றார்.

 

சுமித்தி தங்கராசா

Fri, 07/24/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை