மேற்குக் கரையை இஸ்ரேலுடன் இணைக்கும் திட்டத்திற்கு தயார்

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் அனைத்து குடியேற்றங்கள் மற்றும் ஜோர்தான் பள்ளத்தாக்கை இஸ்ரேலுடன் இணைக்கும் திட்டம் பற்றி இஸ்ரேல் அமைச்சரவை இன்று வாக்கெடுப்பை நடத்த வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை பலஸ்தீனர்கள் மற்றும் சர்வதேச சமூகத்திடம் எதிர்ப்பை எற்படுத்தியுள்ளது.

1967 போரில் இஸ்ரேல் படை ஆக்கிரமித்த நிலங்களை இஸ்ரேல் தமது ஆட்புலத்திற்குள் இணைப்பதற்கு பலஸ்தீன தலைவர்கள், ஐக்கிய நாடுகள், ஐரோப்பிய சக்திகள் மற்றும் அரபு நாடுகள் எதிர்ப்பை வெளியட்டுள்ளன. இது பலஸ்தீனர்களிடையே ஆர்ப்பாட்டங்களை தூண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தில் மேற்குக் கரையின் 30 வீதமான நிலத்தில் இஸ்ரேலின் இறையாண்மைக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மேற்குக் கரை, கிழக்கு ஜெரூசலம் மற்றும் காசா பகுதிகளை உள்ளடக்கிய தனி நாடு பற்றி பலஸ்தீனர்கள் எதிர்பார்ப்புக் கொண்டுள்ளனர். ஆக்கிரமிப்பு நிலங்களில் இஸ்ரேலின் குடியேற்றங்கள் சட்டவிரோதமானது என்று சர்வதேச சட்டம் கருதுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

Wed, 07/01/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை