‘கொரோனா’ பற்றி ஆராய நிபுணர் குழு சீனா விரைவு

உலக சுகாதார அமைப்பு கொரோனா வைரஸ் தொற்று எங்கிருந்து ஆரம்பித்தது என்பதை ஆராய சீனாவிற்குக் குழுவை அனுப்பவுள்ளதாக அந்த அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் கெப்ரியேசுஸ் தெரிவித்துள்ளார்.

அடுத்த வாரம் அந்தக் குழு சீனாவிற்குச் செல்லும் என்று அவர் குறிப்பிட்டார்.

“வைரஸ் தொற்றைப் பற்றி முழுமையாக அறிந்தால் தான் அதனை எதிர்த்து இன்னும் இலகுவாகப் போராட முடியும். நோய்த் தொற்று எங்கிருந்து ஆரம்பித்தது என்பதையும் தெரிந்துகொண்டால் அதனை முறியடிக்க உதவியாக இருக்கும்” என்று டெட்ரோஸ் கூறினார்.

வூஹானில் இருக்கும் ஆய்வுக்கூடத்திலிருந்து கொரோனா வைரஸ் வந்திருக்கக்கூடும் என்று அமெரிக்கா கருதுகிறது. ஆனால் சீனா அமெரிக்காவின் வாதத்தை மறுத்து வருகிறது. அறிவியல் வல்லுநர்கள் கொரோனா வைரஸ் இயற்கையாக உருவானது என்று கூறுகின்றனர்.

கடந்த ஆண்டு இறுதியில் சீனாவின் வூஹான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த வைரஸ் தொற்று ஒரு உலகளாவிய நோய்த் தொற்று என்று உலக சுகாதார அமைப்பு கடந்த மார்ச் 11 ஆம் திகதி பிரகடனம் செய்தது.

தற்போது இந்த நோய்த் தொற்றினால் ஒரு கோடிக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டு அரை மில்லியனுக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.

Wed, 07/01/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை