கொரோனாவுக்கு மத்தியில் அமெரிக்காவில் கடும் புயல்

அமெரிக்காவில் கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள டெக்சாஸ் மாநிலத்தில் ஹன்னா புயல் தாக்கியது.

அட்லாண்டிக் கடலில் உருவான இந்த புயல், தெற்கு டெக்சாசின் பாட்ரே தீவை கடந்த சனிக்கிழமை மாலை தாக்கியது. அதனைத் தொடர்ந்து கடலோர பகுதிகளில் கடும் சூறாவளி காற்றுடன் கன மழை பெய்து வருகிறது. கடல் கடும் கொந்தளிப்பாக காணப்படுகிறது.

இந்தப் புயல் நேற்று மாலை கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது. ஹட்சன் பகுதியையும் இது தாக்கும் என கருதப்படுகிறது.

அமெரிக்க தேசிய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிக்கையில், ஹன்னா புயல் கரையை கடக்கும் சமயத்தில் மணிக்கு 120 முதல் 150 கிலோமீற்றர் வேகத்தில் புயல்காற்று வீசும் என்றும், கனமழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

32 பகுதிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள டெக்சாஸ் ஆளுநர் க்ரேக், இந்த புயலை எதிர்கொள்ள கொரோனா தடையாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். மணிக்கு 137 கி.மீ வேகத்தில் வீசும் புயலின் காரணமாக வீட்டுக் கூரைகள் சரிவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த புயல் வகை ஒன்றாக வரையறுக்கப்பட்டுள்ளது.

Mon, 07/27/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை