ஸ்பெயினில் 2ஆவது கட்ட கொரோனா தொற்று அச்சம்

கொரோனா வைரஸ் தொற்றின் மோசமான இரண்டாவது அலை தாக்கம் பற்றிய அச்சம் காரணமாக ஸ்பெயினில் புதிய கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன.

கடலோனியா பிராந்தியத்தில் இரவு நேர கேளிக்கை இடங்களுக்கு இரண்டு வாரங்கள் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன. எனினும் வட கிழக்கு பிராந்தியத்திற்கு வெளியிலும் நோய்த் தொற்று அதிகரிக்க ஆரம்பித்துள்ளது.

ஸ்பெயினில் இருந்து வருவோருக்கு பிரிட்டன் சுய தனிமைப்படுத்தலை கட்டாயப்படுத்தியுள்ளது. நோர்வேயிலும் இதே போன்ற சட்டம் கொண்டுவரப்பட்டிருப்பதோடு பிரான்சில் பயண எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியில் புதிய நோய்த் தொற்று சம்பவங்களில் அதிகரிப்பு ஏற்பட்டிருப்பதோடு, பொருளாதாரத்தை மீள ஆரம்பிப்பது மற்றும் புதிய தொற்றை கட்டுப்படுத்துவதற்கு இடையே இந்த நாடுகள் போராடி வருகின்றன.

ஸ்பெயினில் அவசர நிலை தளர்த்தப்பட்டு ஒரு மாதம் கடந்திருக்கும் நிலையில் பார்சிலோனா, சரகோசா மற்றும் தலைநகர் மெட்ரிட்டில் புதிய நோய்த் தொற்று சம்பவங்களில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் இரண்டாவது அலை தாக்கம் பற்றி எச்சரிக்கையை அரசு விடுத்துள்ளது.

Mon, 07/27/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை