உணவு பாதுகாப்பு மற்றும் மக்களுக்கு தேவையான புரதத்தின் அளவை உறுதிப்படுத்தல்

கடற்றொழில், நீரியல்வள அமைச்சு தீவிர செயற்பாடு  

இலங்கை மக்களுக்கு தேவையான விலங்குப் புரதம் கிடைப்பதற்கு மீன் உற்பத்திகளே முக்கிய ஆதாரமாக உள்ளது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.7 சதவீதத்தை இது பூர்த்தி செய்கிறது. அத்துடன் மக்களின் உணவில் 65 சதவீத விலங்குப் புரதத்துக்கு இது வழிவகுக்கிறது.  

அதனால் கடலில் பல நாட்கள் தரித்து நின்று மீன்பிடித்தலில் ஈடுபட்டுள்ள மீன்பிடி படகுகளில் மீன்களை சேமித்து வைக்கும் வசதிகளை மேம்படுத்தவும், அவ்வாறு பல நாட்கள் கடலில் தரித்து நின்று மீன் பிடிக்கும் புதிய மீன்பிடி படகுகள் தொடர்பாக புதிய வடிவமைப்பு மாதிரிகளை அறிமுகப்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.  

இலங்கையின் மீன்பிடிக் கைத்தொழிலில் மீன்கள் பிடிக்கப்பட்ட பின்னர் அவை முறையாக கையாளப்படாததால் வருடாந்த ஏற்படும் 22 பில்லியன் ரூபா இழப்பை குறைத்து உணவுப் பாதுகாப்பு மற்றும் மக்களுக்கு தேவையான புரதத்தின் தேவையை உறுதிப்படுத்தும் நோக்கத்திலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சின் வழிகாட்டலின் கீழ் தேசிய நீரியல் வளங்களின் ஆய்வு மற்றும் அபிவிருத்தி முகவரகம், தேசிய பொறியியல் ஆய்வு மற்றும் அபிவிருத்தி கேந்திரம், மீன் பிடி மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் ஆகியவை இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றன.  

இலங்கையின் சமூக மற்றும் பொருளாதாரத்துக்கு மீன்பிடித்துறை முக்கிய பங்களிப்பை வழங்குகிறது.  

இலங்கையர் ஒருவர் வருடத்துக்கு 15.8 கிலோ மீன் உண்கிறார். சுகாதார அமைச்சின் ஆலோசனையின் படி இலங்கையர் ஒருவர் வருடாந்தம் 21 கிலோ மீன் உண்ணவேண்டும். எனவே நாட்டின் உற்பத்தியை அதிகரிப்பதும், பிடிக்கப்படும் மீனின் தரத்தை உறுதிப்படுத்துவதுடன் மக்களின் புரதத் தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கான மீனை பிடிக்க வேண்டியுள்ளது.  

நாரா முகவரகம் முன்னர் மேற்கொண்ட ஆய்வுகளின்படி நாடளாவிய ரீதியில் உள்ள மீன்பிடி துறைமுகங்களில் பிடிக்கப்படும் மீனில் 30 முதல் 40 சதவீதம் முறையாக கையாளப்படாததால் தரம் ஏற்றுக்கொள்ள முடியாத நிலையிலும் உள்ளன. தென் பகுதி மீன்பிடி துறைமுகங்களில் இவ்வாறான தரமற்ற மீன்களினால் ஏற்படும் நட்டம் 60 முதல் 70 சதவீதமாக உள்ளது.  

பிடிக்கப்படும் மீன்கள் முறையாக கையாளப்படாததால் வருடாந்தம் 22 பில்லியன் ரூபா நட்டம் ஏற்படுகிறது. இவ்வாறான நட்டமடைவது மேலும் தாமதமின்றி இதற்காக பல நாட்கள் கடலில் தரித்து நின்று மீன்பிடித்தலில் ஈடுபடும் படகுகளின் மீன் பதனிடும் மற்றும் சேமிப்பு வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும். அத்துடன் புதிதாக உருவாக்கப்படும் மீன்பிடி படகுகளின் வடிவமைப்புகளை புதிதாக அறிமுகப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.  

Thu, 07/16/2020 - 09:21


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை