கொவிட்-19 நிதியத்தின் நிதி 1491 மில்லியனாக அதிகரிப்பு

தனிப்பட்ட, நிறுவன அன்பளிப்புகள் மற்றும் நேரடி வைப்புகளுடன்   கொவிட் - 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் வைப்பு மீதி 1491 மில்லியனாக அதிகரித்துள்ளது.

செல்வி டப்ளியு.ஜி.ஜயனி திலக்ஷனா கருணாரத்ன 3,000 ரூபாவை நிதியத்திற்கு அன்பளிப்பு செய்துள்ளார். அதற்கான பணம் பிரதமர் மஹிந்த ராஜபக்சவினால் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கையளிக்கப்பட்டது.

இலங்கை கப்பல் கூட்டுத்தாபனம் 196,683.50 ரூபாவையும் இலங்கை துறைமுகங்கள் அதிகார சபை 18,615,544.29 ரூபாவையும் தம்புல்லை மாநகர சபை சுகாதார ஊழியர்கள் 76,135.79 ரூபாவையும் செல்வி.எஸ்.ஏ.விஹங்கா தர்மசிறி செனரத் 2,364 ரூபாவையும் மத்திய மாகாண கல்வி திணைக்களம் 10,581,510.40 ரூபாவையும் மத்திய மாகாண அரசாங்க அதிகாரிகள் 133,666.52 ரூபாவையும் திரு.குணதிலக்க பண்டார, 5,000 ரூபாவையும் திரு.ஆர்.ஆர்.நவரத்ன 5,000 ரூபாவையும் உக்குவலை பிரதேச சபை உறுப்பினர் எம்.ஜி.எம்.ஜயம்பதி ஹெட்டிபொல 15,000 ரூபாவையும் செல்வி.டப்ளியு.எம்.கே.செனுரி பிரபோதினி நவரத்ன 180 ரூபாவையும் அன்பளிப்பு செய்துள்ளனர். குறித்த அன்பளிப்புகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

கண்டி தேசிய வைத்தியசாலை 2,399,778.50 ரூபாவையும்  Brantel Lanka (Pvt) Ltd 200,000 ரூபாவையும் மீன்பிடி, நீரியல்வள அமைச்சு 187,669 ரூபாவையும் ஓல்கொட் மாவத்தை சிறு வியாபாரிகள் நலன்புரி சங்கம் 50,000 ரூபாவையும் ஓய்வூதிய திணைக்களம் 195,402.32 ரூபாவையும் மீன்பிடி, நீரியல்வள அபிவிருத்தி அமைச்சு 217,372.83 ரூபாவையும் புத்தளம் பிரதேச செயலாளர் அலுவலகம் 105,000 ரூபாவையும் வைத்தியர் திரு.ஆர்.எம்.ஜே.நாவின்ன 200,000 ரூபாவையும் உடுதும்பர பிரதேச செயலாளர் அலுவலகம் 46,646 ரூபாவையும் கண்டி மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் 155,317.66 ரூபாவையும் அரச சேவைகள் ஆணைக்குழுவின் உதவிச் செயலாளர் திருமதி.பி.டி.வை.ஆர்.விமலரத்ன 15,908.75 ரூபாவையும் நிதியத்திற்கு அன்பளிப்பு செய்துள்ளனர்.

தற்போது இடுகம கொவிட் 19 சுகாதார, பாதுகாப்பு நிதியத்தின் மீதி 1,491,752,709.01 ரூபாவாகும்.

உள்நாட்டு, வெளிநாட்டு நன்கொடையாளர்கள் இக்கணக்கிற்கு பங்களிப்பு செய்து வருகின்றனர். காசோலைகள் அல்லது டெலிகிராப்கள் மூலமும் www.itukama.lk என்ற இணையத்தளத்தின் ஊடாகவோ அல்லது #207# என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு பங்களிப்பை செய்ய முடியும்.

0760700700/ 0112320880/ 0112354340/ 0112424012 என்ற இலக்கங்களுடன் தொடர்புகொண்டு மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்ள முடியும்.

Thu, 07/16/2020 - 09:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை