'தேர்தலை ஒத்திவைக்கும் அதிகாரம் அரசுக்கோ ஜனாதிபதிக்கோ கிடையாது'

கொரோனா வைரஸின் தாக்கம் இரண்டு வருடங்களுக்கு இருக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளதால் பொதுத்தேர்தலை இரண்டு வருடங்களுக்கு ஒத்திவைக்க வேண்டுமென்றா சஜித் பிரேமதாச கேட்கிறார் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதயகம்மன்பில வினவியுள்ளார். 

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர் , “சஜித் பிரேமதாச மீண்டும், பொதுத்தேர்தலை பிற்போடுமாறு அரசாங்கத்திடமும் தேர்தல்கள் ஆணைக்குழுவிடமும் கோரிக்கை விடுத்துள்ளார். 

ஆனால், தேர்தலை பிற்போட அரசாங்கத்துக்கோ ஜனாதிபதிக்கோ எந்தவொரு அதிகாரமும் கிடையாது என்றும் அவர் கூறினார். 

இந்த அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு மட்டும்தான் இருக்கிறது. சஜித் பிரேமதாசவின் கோரிக்கைக்கு இணங்க, இரண்டு தடவைகள் பொதுத் தேர்தலை ஒத்திவைக்கப்பட்டது. 

 ஏப்ரலில் 25 நடக்க வேண்டிய தேர்தலை ஜுன் 20 ஆம் திகதிக்கும், ஜுன் 20 ஆம் திகதி நடக்கவிருந்த தேர்தலை ஒகஸ்ட் 5 ஆம் திகதிக்கும் ஆணைக்குழு பிற்போட்டது. 

ஏப்ரல் 30 ஆம் திகதி முதல், ஜுலை 9 ஆம் திகதிவரையான 70 நாட்களில், இலங்கையில் சமூக ரீதியாக கொரோனா பரவவில்லை. 

 இந்த நிலையில், ஜுன் 20 ஆம் திகதியே பொதுத்தேர்தலை நடத்தியிருந்தால், இதனைவிட அச்சமில்லாத சூழலில் மக்கள் வாக்களிக்க வருகைத் தந்திருப்பார்கள். 

எதிர்காலத்தில் கொரோனா பரவல் அதிகரிக்குமா, குறைவடையுமா என்பதை எவராலும் கூறமுடியாதுள்ளது. 

சஜித் பிரேமதாசவுக்கு இதுதொடர்பாக வாக்குறுதி வழங்கவும் முடியாது. இன்னும் 2 வருடங்களுக்கேனும் கொரோனாவுடன் வாழவேண்டிய நிலைமை இருக்கும்.உலக சுகாதார ஸ்தாபனம் இது தொடர்பில் எச்சரித்துள்ளது.

இந்த நிலையில் இரண்டு வருடங்களுக்கு பொதுத்தேர்தலை பிற்போடவா, சஜித் பிரேமதாச முயற்சிக்கிறார். 

பொதுத்தேர்தலை உரிய திகதியில் நடத்த வேண்டும் என நாம் கோருகிறோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Thu, 07/16/2020 - 09:14


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை