செப்டம்பரில் ஐ.பி.எல். போட்டியை ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடத்த முடிவு

ஐ.பி.எல்., தொடரின் 13வது சீசன் ஐக்கிய அரபு இராச்சிய, மண்ணில் நடக்கும் எனத் தெரிகிறது. வீரர்களுக்கு தனி விமானம், ஓட்டல் அறைகள் பதிவு என அணி உரிமையாளர்கள் பிஸி ஆகி விட்டனர்

இந்திய கிரிக்கெட் சபை (பி.சி.சி.ஐ.,) சார்பில் உயர்மட்டக் குழு கூட்டம் கங்குலி தலைமையில் காணொலி வாயிலாக நடந்தது.

கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 13வது சீசன் ஐ.பி.எல்., தொடரை நடத்துவதற்கான வாய்ப்பு குறித்து விவாதிக்கப்பட்டது. முடிவில், வரும் அக்., நவ. 15ல் அவுஸ்திரேலிய மண்ணில் நடக்கவுள்ள டுவென்டி உலக கோப்பை தொடர் குறித்து, இம்மாதம் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) எடுக்கும் முடிவுக்காக காத்திருப்பது என முடிவு செய்யப்பட்டது.

ஒருவேளை உலக கோப்பை ஒத்தி வைக்கப்படும் பட்சத்தில், ஐ.பி.எல்., நடத்த மத்திய அரசிடம் பி.சி.சி.ஐ., அனுமதி கேட்கும்.

கொரோனா பரவல் காரணமாக மத்திய அரசு, இந்திய மண்ணில் நடத்த அனுமதி தராத பட்சத்தில், ஐக்கிய அரபு இராச்சியத்தில் இத்தொடரை நடத்த பி.சி.சி.ஐ., முடிவு செய்துள்ளது. எதிர்வரும் செப்.,நவ., ல் இத்தொடர் நடக்கலாம்.தனி விமானம் இதனிடையே ஐ.பி.எல்., அணி உரிமையாளர்கள் போட்டிகளுக்கு வேகமாக தயாராகி வருவதாக தெரிகிறது. ஐ.பி.எல்., அணி அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்தியாவில் விமான சேவை எப்படி இருக்கும் எனத் தெரியவில்லை. ஒவ்வொரு அணியிலும் 35 முதல் 40 பேர் வரை உள்ளனர் என்பதால் பெரும்பாலான அணிகள் தங்களுக்கென தனி விமானத்தை வாடகைக்கு அமர்த்தி வருகின்றன, என்றார்.

மற்றொரு அணி நிர்வாகி ஒருவர் கூறுகையில்,இந்தியாவில் வீரர்கள் ஒவ்வொருவரும் அவரவர் வீடுகளில் உள்ளனர்.

இவர்களை இந்தியாவில் ஒன்றிணைக்க முடியாது. இதனால் விமானத்தில் அழைத்துச் சென்று கொரோனா சோதனை நடத்தி, உயர்மட்ட பாதுகாப்புகளுடன் தனிமைப்படுத்தி தங்க வைக்க ஏற்பாடுகள் நடக்கின்றன, என்றார். தவிர அபுதாபியில் வீரர்கள் தங்குவதற்கு தேவையான ஓட்டல் அறைகள் பதிவு செய்யும் பணியும் வேகமெடுத்துள்ளதாக தெரிகிறது.

Mon, 07/20/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை