சென்டு நகர துணைத் தூதரகத்தில் இருந்து அமெரிக்கா வெளியேற்றம்

சீனாவுடனான முறுகல்

சீனா விடுத்த 72 மணி நேர காலக்கெடு முடிவடைந்ததை அடுத்து சென்டு நகரில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகத்தில் இருந்து அமெரிக்க இராஜதந்திர பணியாளர்கள் நேற்று வெளியேறியுள்ளனர்.

அமெரிக்கா, ஹ_ஸ்டன் நகரில் இருக்கும் சீனத் துணைத் தூதரகத்தை கடந்த வாரம் மூடியதற்கு பதில் நடவடிக்கையாகவே அமெரிக்க துணைத் தூதரகத்தை மூடுவதற்கு சீனா உத்தரவிட்டது. 

இந்நிலையில் நேற்று திங்கட்கிழமை காலக்கெடு முடிவதற்கு முன்னர் அந்தக் கட்டடத்தில் இருந்து ஊழியர்கள் வெளியேறியதோடு, பெயர் பலகை அகற்றப்பட்டு, அமெரிக்க தேசிய கொடி கீழிறக்கப்பட்டது.

காலக்கெடு முடிந்ததை அடுத்து சீன ஊழியர்கள் கட்டடத்திற்குள் நுழைந்ததாக சீன வெளியுறவு அமைச்சு குறிப்பிட்டது.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள பேச்சாளர் ஒருவர் கூறும்போது, “கடந்த 35 ஆண்டுகளாக திபெத் உட்பட மேற்கு சீனாவில் மக்களுடன் எமது தூதரகம் மையமாக இருந்தது. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் முடிவு எமக்கு ஏமாற்றத்தை தருவதோடு சீனாவில் எமது ஏனைய தளங்கள் மூலமாக இந்த முக்கியமான பிராந்திய மக்களுக்கு எமது பயணத்தை தொடர முயற்சிப்போம்” என்று தெரிவித்துள்ளது.

அமெரிக்க துணைத்தூதரகம் மூடப்பட்டபோது அங்கு உள்ளூர் குடியிருப்பாளர்கள் ஒன்று திரண்டு சீன கொடியை அசைத்தபடி செல்பி படங்களும் எடுத்துக் கொண்டனர்.  ஹஸ்டனில் இருக்கும் சீன துணைத் தூதரகம் ஒரு வேவு பார்க்கும் மையமாக இயங்குவதாக குற்றம் சுமத்தியே அமெரிக்கா அதனை மூட உத்தரவிட்டிருந்தது.   

பல விவகாரங்கள் தொடர்பில் அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையிலான உறவு அண்மைக்காலத்தில் விரிசல் அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Tue, 07/28/2020 - 09:02


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை