வடக்கு, கிழக்கில் மழை பெய்யும் வாய்ப்பு

மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் நுவரெலியா மாவட்டத்திலும் அவ்வப்போதுமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஊவா, கிழக்கு, வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும், வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கிழக்கு மாகாணத்தின் கரையோரப் பிரதேசங்களில் காலை வேளையிலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.வடமத்திய,ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் 75 மில்லிமீற்றர்அளவான மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாகவும், வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும். எனவே, மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளுமாறு பொதுமக்களை, வளிமண்டலவியல் திணைக்களம்  அறிவுறுத்தியுள்ளது.

 

Fri, 07/10/2020 - 08:49


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை