காலனி துன்புறுத்தல்களுக்காக பெல்ஜியம் மன்னர் பிலிப் கொங்கோவிடம் ‘வருத்தம்’

கொங்கோ ஜனநாயக குடியரசு மீதான காலனித்துவ துன்புறுத்தல்களுக்காக பெல்ஜியம் மன்னர் பிலிப் தமது ‘ஆழ்ந்த வருத்தத்தை’தெரிவித்துள்ளார்.

கொங்கோவின் 60 ஆவது சுதந்திர தினத்தை ஒட்டி அந்நாட்டு ஜனாதிபதி பெலிக்ஸ் ட்ஷிசெசெடிக்கு எழுதிய கடிதத்திலேயே மன்னர் இதனை தெரிவித்துள்ளார்.

மத்திய ஆபிரிக்க நாடான கொங்கோ 19ஆம் நூற்றாண்டு தொடக்கம் 1960 ஆம் ஆண்டு சுதந்திரம் பெறும் வரை பெல்ஜியத்தின் காலனியாக இருந்தது. பெல்ஜியத்தின் கொடுங்கோல் காலனி ஆட்சியில் மில்லியன் கணக்கான ஆபிரிக்கர்கள் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில் அண்மையில் உலகெங்கும் இடம்பெற்று வரும் இனவாதத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் ஐரோப்பாவின் கடந்த கால வரலாறு பற்றிய விமர்சனங்களும் வலுத்துள்ளன. பெல்ஜியம் காலனித்துவ தலைவர் மன்னர் இரண்டாவது லியோபோல்ட் சிலைகளுக்கு எதிராக அங்கு ஆர்ப்பாட்டங்களும் இடம்பெற்று வருகின்றன.

அன்ட்வோப் நகர நிர்வாகம் அவரது சிலையை பொது சதுக்கத்தில் இருந்தும் அகற்றியது. அவரது ஆட்சியில் 10 மில்லியனுக்கும் அதிகமான ஆபிரிக்கர்கள் கொல்லப்பட்டதாக நம்பப்படுகிறது.

தற்போதைய பெல்ஜிம் மன்னர் அவரது நேரடி வம்சாவழியைச் சேர்ந்தவராவார்.

Wed, 07/01/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை