Header Ads

13 கொலைகளை செய்ததாக பிரபல கொலையாளி ஒப்புதல்

அமெரிக்காவின் பிரபல கொலையாளியான ஜோசப் டியெங்கேலோ 13 கொலைகளை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார். தம் மீதான மரண தண்டனையை கைவிடும் ஒப்பந்தத்தின் கீழ் அவர் இந்த ஒப்புதலை வழங்கியுள்ளார்.

1970 மற்றும் 80 களில் ஒரு பொலிஸ் அதிகாரியாக இருந்தபோதே டியெங்கேலோ இந்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளார். பரம்பரை மரபணு தொடர்பான இணையத்தளம் ஒன்றின் ஊடாக அவரது மரபணு கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து 2018 ஆம் ஆண்டு அவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் கலிபோர்னியாவின் சக்ரமென்டோ நகரில் பெரிய பல்கலைக்கழகக் கூடம் ஒன்றில் அவர் மீதான விசாரணை கடந்த திங்கட்கிழமை இடம்பெற்றது.

இதில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரும் பங்கேற்றனர். இதன்போது அவர் பல கற்பழிப்புகள், கொள்ளை மற்றும் மேலும் பல குற்றங்களை செய்ததையும் ஒப்புக்கொண்டார். இந்த குற்றங்கள் தொடர்பான விசாரணை கடந்த நான்கு தசாப்தங்களாக நீடித்து வந்தமை குறிப்பிடத்தக்கது. 74 டியெங்கேலோ மீது வரும் ஓகஸ்டில் இடம்பெறவிருக்கும் இரண்டாவது வழக்கு விசாரணையின்போது அவருக்கு அயுள் தண்டனை விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Wed, 07/01/2020 - 06:00


from tkn

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.