93 வயது நாஜி வதை முகாம் காவலருக்கு ஒத்திவைத்த சிறை

இரண்டாவது உலகப் போரில் நாஜி வதை முகாம் ஒன்றில் பல யூதர்கள் உட்பட 5,232 பேரை கொலை செய்வதற்கு உதவியதாக 39 வயது ஜெர்மனி ஒருவருக்கு இரண்டு ஆண்டுகள் ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

நாஜி காலத்து குற்றச் செயல்கள் குறித்து இடம்பெற்ற கடைசி வழக்கு விசாரணைகளில் ஒன்றாக இது உள்ளது.

இன்றைய போலந்துக்கு அருகில் இருந்த வதை முகாம் ஒன்றில் ப்ரூனோ டி என்பவர் காவலராக இருந்துள்ளார். இங்கு 1944 ஓகஸ்ட் தொடக்கம் 1945 ஏப்ரல் வரை இடம்பெற்ற கொலைகளுக்கு இவர் உடந்தையாக இருந்ததாக ஹம்பர்க் நீதிமன்றத்தால் நேற்று குற்றங்காணப்பட்டது. இந்த முகாமில் தாம் இருந்ததை அவர் ஒப்புக்கொண்டபோதும் இத்தனை குற்றங்கள் புரியவில்லை என்று அவர் மறுத்துள்ளார்.

குறித்த ஸ்டட்டோப் முகாமில் பல யூதர்கள் உட்பட சுமார் 65,000 பேர் கொல்லப்பட்டு அல்லது உயிரிழந்திருப்பதாக அந்த அருங்காட்சியக இணையதளம் குறிப்பிடுகிறது.

அப்போது 17 அல்லது 18 வயதாக இருந்த ப்ரூனோவுக்கு சிறுவர் குற்றங்கள் அடிப்படையிலேயே தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

Fri, 07/24/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை