உதவி பணியாளர்கள் ஐந்து பேர் நைஜீரியாவில் கடத்திக் கொலை

வட மேற்கு நைஜீரியாவின் போர்னோ மாநிலத்தில் கடந்த மாதம் ஜிஹாதிக்களால் கடத்தப்பட்ட ஐவரும் கொல்லப்பட்டுள்ளனர்.

ஜைீரிய அவசரகால முகாமைத்துவ நிறுவனம் மற்றும் சர்வதேச தொண்டு அமைப்புகளுடன் தொடர்புபட்டவர்களே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளனர். இந்தக் கொலைக்கு பொகோ ஹராம் மீது குற்றம்சாட்டும் நைஜீரிய ஜனாதிபதி முஹமது புஹாரி, கொலையுண்டவர்களுக்கு நீதி நிலைநாட்டப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.

இந்தப் பிராந்தியத்தில் ஆதிக்கம் செலுத்தும் இஸ்லாமியவாத குழுக்களை அழித்து ஒழுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஒரு தசாப்தத்திற்கு மேலாக இந்த குழு நடத்திய வன்முறைகள் காரணமாக ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டதோடு பலரும் இடம்பெயர்ந்து மனிதாபிமான நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இதில் உதவிப் பணியாளர்கள் அடிக்கடி இலக்காகி வருகின்றனர்.

பொகோ ஹராமைச் சேர்ந்த கொலையாளிகள், கொலையில் ஈடுபடும் 35 விநாடி வீடியோ ஒன்றை வெளியிட்டிருப்பதாக நைஜீரிய இணைய பத்திரிகை ஒன்று குறிப்பிட்டுள்ளது.

இதில் கண்கள் கட்டப்பட்ட பணயக் கைதிகளுடன் முகமூடி அணிந்திருக்கும் ஐந்து பேர் இருப்பதாகவும் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்படுவதாகவும் அந்தப் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.

Fri, 07/24/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை