75 பந்துகளுக்குள் அதிகமுறை சதம் அடித்து காட்டிய 5 முக்கிய வீரர்கள்

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் வெறும் 75 பந்துகளுக்குள் அதிகமுறை சதம் அடித்த ஐந்து முக்கிய வீரர்கள் குறித்து பார்க்கலாம்.

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் சதம் அடிப்பது என்பது சாதாரண விஷயம் இல்லை. அதிலும் 100க்கும் குறைவான பந்துகளில் சதம் அடிப்பது என்பது இன்னும் கடினமான ஒரு விஷயம்.

அந்த வகையில் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் வெறும் 75 பந்துகளுக்குள் அதிகமுறை சதம் அடித்த ஐந்து முக்கிய வீரர்கள் குறித்து இங்கு பார்ப்போம்.

அப்ரிடி உலக வரலாற்றில் இவர் ஒரு மிகச்சிறந்த சகலதுறை ஆட்டக்கார் ஆவார். பாகிஸ்தானை சேர்ந்தவர், பிரபலமான கிரிக்கெட் வீரர்களில் ஒருவர். இவர் 398 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று ஆறு முறை சதம் அடித்துள்ளார். அதில் 4 முறை 75 பந்துகளுக்கும் குறைவான பந்துகளில் அடித்துள்ளார். இலங்கைக்கு எதிராக நடந்த ஒருநாள் போட்டியில் 36 பந்துகளில் சதம் அடித்து உலக சாதனையாக இருந்தது.

ஸ்ரீலங்காவின் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர் ஆன ஜயசூர்ய கிரிக்கெட் வரலாற்றில் தனக்கென தனி அடையாளத்தைப் படைத்துள்ளார்.

இடது கை துடுப்பாட்ட வீரரான இவர் தனது அணிக்காக பல சாதனைகளைப் புரிந்துள்ளார்.  இவர் 100க்கும் அதிகமான டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று 14 முறை சதம் அடித்துள்ளார்.

ஒருநாள் போட்டிகளில் மிகச்சிறப்பான பங்காற்றிய இவரின் ஸ்ட்ரைக் ரேட் 90-க்கும் அதிகமாகவே இருந்தது. 

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் மொத்தம் 28 சதங்கள் அடித்துள்ள சனத் ஜயசூரிய அதில் ஐந்து சதங்களை 75-ற்கும் குறைவான பந்துகளில் அடித்துள்ளார்.

Thu, 07/23/2020 - 11:55


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை