பிக் பாஷ் ரி20 லீக், மகளிர் பிக் பாஷ் போட்டி அட்டவணையை வெளியிட்டது ஆஸி

அவுஸ்திரேலியாவில் டிசம்பர் முதல் பெப்ரவரி வரை பிக் பாஷ் ரி 20 லீக் தொடர் நடைபெறும் வகையில் போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றால் அவுஸ்திரேலியாவில் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறாமல் உள்ளது. ரி 20 உலக கிண்ணத்தை நடத்தும் ஆர்வத்தில் அவுஸ்திரேலியா தற்போதைய சூழ்நிலையில் இல்லை. இங்கிலாந்து ஒருநாள் கிரிக்கெட் தொடர், இந்தியா டெஸ்ட் தொடரை எதிர்நோக்கி இருக்கிறது.

வீரர்கள் பயிற்சியை மேற்கொண்டு வந்த நிலையில், மெல்போர்ன் நகர் அமைந்துள்ள விக்டோரியா மாநிலத்தில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. இதனால் அவுஸ்திரேலியா உடனடியாக நாட்டின் எல்லையை திறக்க வாய்ப்பில்லை.

இந்நிலையில் 10-வது பிக் பாஷ் ரி 20 லீக் தொடருக்கான போட்டி அட்டவணையை வெளியிட்டுள்ளது. இந்தியா - அவுஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் தொடங்கும் டிசம்பர் 3-ம் திகதி பிக் பாஷ் தொடர் தொடங்குகிறது. சுமார் 60 நாட்களுக்கு மேல் நடக்கும் இந்த கிரிக்கெட் திருவிழாவின் இறுதிப் போட்டி 2021 பெப்ரவரி 6-ம் திகதி முடிவடைகிறது.

முதல் ஆடடத்தில் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் - மெல்போர்ன் ரெனேகட்ஸ் அணிகளும் அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் களம் இறங்குகின்றனர்.

56 போட்டிகள் மாலை நேரத்தில் நடக்கின்றன. 8 நாட்கள் இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன. அப்போது போட்டி மாலை மந்து மணிக்கு முன்னதாக தொடங்குறிது.

அதேபோல் 59 நாட்கள் நடைபெறும் பெண்களுக்கான பிக் பாஷ் ரி 20 லீக் தொடருன்கான போட்டி அட்டவணையையும் வெளியிட்டுள்ளது. அக்டோபர் 17-ம் திகதி தொடங்கி நவம்பர் 29-ம் திகதி முடிவடைகிறது.

Fri, 07/17/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை