கொவிட்–19: முதல் நாடாக சீனப் பொருளாதாரம் மீட்சி

சீனப் பொருளாதாரம் இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டில் 3.2 வீதம் வளர்ச்சி கண்டுள்ளது. பொருளாதார நிபுணர்கள் எதிர்வுகூறியதை விடவும் சீனாவின் பொருளாதாரம் இரண்டரை வீதம் அதிக வளர்ச்சியடைந்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக இதுவரை இல்லாத அளவில் சுருங்கிய சீனப் பொருளாதாரம் இப்போது மீண்டு வருகிறது.

உலகின் இரண்டாவது மிகப் பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட சீனா, கடந்த இரண்டு மாதங்களாக கொவிட்–19 நோய்ப் பரவல் சூழலில் இருந்து மெல்ல மெல்ல மீண்டு வருகிறது.

நலிவடைந்துள்ள பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும் வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், சீன அரசாங்கம் பல்வேறு திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது.

காலாண்டு அடிப்படையில் ஏப்ரல் மாதத்திலிருந்து ஜூன் மாதம் வரை சீனாவின் உள்நாட்டு உற்பத்தி 11.5 வீதம் உயர்ந்தது.

Fri, 07/17/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை