கொவிட்–19: பிள்ளைகளின் தடுப்பூசி பயன்பாடு குறைவு

உலகை உலுக்கி வரும் கொவிட்–19 நோய்ப் பரவல் காரணமாக குறிப்பிட்ட நோய்களுக்குத் தடுப்பு மருந்து எடுக்கும் பிள்ளைகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்திருப்பதாய் ஐக்கிய நாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

டிப்தீரியா எனும் தொண்டை அழற்சி நோய், டெட்டனஸ் எனும் இசிவு நோய், கக்குவான் இருமல் நோய் ஆகியவற்றுக்காகத் தடுப்பூசி எடுக்கும் பிள்ளைகளின் எண்ணிக்கை இவ்வாண்டின் முதல் 4 மாதத்தில் குறைந்தது.

கிட்டத்தட்ட 30 ஆண்டுகளில் இத்தகைய போக்கு அதிகரித்திருப்பது இதுவே முதல் முறை என்று நிறுவனம் குறிப்பிட்டது.

தடுப்பு மருந்துகள் நோய்த்தொற்றுக்கு எதிராகப் போராடும் முக்கிய சக்திகள் என்று உலக சுகாதார அமைப்பு கூறியது.

தடுப்பு மருந்துகள் எடுத்துக்கொள்ளாத பிள்ளைகளின் வேதனையும் மரணமும் அதிகரிக்கக்கூடும் என்றும் அது குறிப்பிட்டது. நோய்ப் பரவல் காரணமாக, இவ்வாண்டு மே மாதம் வரை, தட்டம்மைக்கான தடுப்பு மருந்து குறித்த சுமார் 30 விழிப்புணர்வுத் திட்டங்கள் ரத்து செய்யப்பட்டன.

Fri, 07/17/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை