பங்களாதேஷ் மருத்துவமனை உரிமையாளர் பிடிபட்டார்

ஆயிரக்கணக்கானவர்களுக்கு கொரோனா வைரஸ் ஏற்படவில்லை என்று போலியான மருத்துவ சோதனை முடிவுகளை வழங்கிய பங்களாதேஷ் மருத்துவமனை உரிமையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

புர்கா அணிந்து கொண்டு இந்தியாவுக்குத் தப்ப முயன்றபோது எல்லையில் உள்ள நதிக் கரை ஒன்றில் வைத்து அவர் கைது செய்யப்பட்டதாக பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

மருத்துவ சோதனை கூட செய்யாமல் பலருக்கு வைரஸ் தொற்று ஏற்படவில்லை என்று சான்றளிக்கப்பட்டது தொடர்பில் 42 வயதான மொஹமது சஹத் என்ற அந்த நபர் கடந்த ஒன்பது நாட்களாக தேடப்பட்டு வந்த நிலையில் பிடிபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மோசடியுடன் தொடர்புபட்டு கடந்த ஒரு சில தினங்களில் ஒரு டஜனுக்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே கொரோனா வைரஸ் தொற்றினால் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கும் பங்களாதேஷில் இந்த போலி சான்றுகள் நிலைமையை இன்னும் மோசமாக்கும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

சஹத்தின் மருத்துவமனைகளில் 10,500 கொரோனா தொற்று சோதனைகள் மேற்கொள்ளப்பட்டபோதும் அவைகளில் 4,200 சோதனைகள் மாத்திரமே உண்மையானது என்றும் மற்றையவை சோதனை கூட செய்யப்படாமல் அளிக்கப்பட்டவை என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

Fri, 07/17/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை