கொள்ளை முயற்சியை முறியடித்த பொலிஸ் அதிகாரி விபத்தில் பலி

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நடந்த நிதிக் கொள்ளை சம்பவத்தில் சந்தேக நபரான வைத்தியரை கைது செய்ய உதவிய அரச புலனாய்வு பிரிவின் பயிலுநர் பொலிஸ் கான்ஸ்டபிள் விபத்தில் மரணமடைந்துள்ளார்.

கடந்த வியாழக்கிழமை (11) பணிக்குச் சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, பம்பலப்பிட்டி, ஹெவ்லொக் வீதியிலுள்ள சம்புத்த ஜயந்தி இல்லத்திற்கு அருகிலுள்ள எரிபொருள் நிலையத்திற்கு முன்னால், டிபென்டர் வாகனமொன்று ​​அவரது மோட்டார் சைக்கிளில் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்தவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றுக் காலை மரணமடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலன்னறுவையைச் சேர்ந்த 22 வயதான சித்தும் அழகப்பெரும என்பவரே உயிரிழந்தவராவார். தேசிய வைத்தியசாலையில் கடந்த 09ஆம் திகதி சம்பளம், மேலதி சேவைக்கான கொடுப்பனவிற்காக வைத்திருந்த ரூ. 79 இலட்சம் கொள்ளைச் சம்பவத்தில் குறித்த கான்ஸ்டபிளுடன் மற்றுமொரு புலனாய்வு சேவையிலுள்ள கான்ஸ்டபிள் ஆகியோர் கொள்ளையரை பின்தொடர்ந்து சென்று கைது செய்தமை குறிப்பிடத்தக்கது.

 

Mon, 06/15/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை