அமெரிக்காவில் மற்றொரு கறுப்பினத்தவர் சுட்டுக்கொலை: ஆர்ப்பாட்டங்கள் தீவிரம்

உணவு விடுதி ஒன்றுக்கு கார் வண்டியை செலுத்தும்போது உறக்கத்திற்குச் சென்ற ஆபிரிக்க அமெரிக்கர் ஒருவரை சுட்டுக் கொன்ற சம்பவம் தொடர்பில் ஆட்லாண்டா பொலிஸ் தலைமை அதிகாரி தமது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

27 வயதான ரெய்சார்ட் ப்ரூக்ஸ் என்பவரே பொலிஸாரினால் கடந்த வெள்ளிக்கிழமை சுடப்பட்டார். இந்நிலையில் பொலிஸ் தலைமை அதிகாரி எரிகா ஷீல்ட்ஸ் கடந்த சனிக்கிழமை தமது பதவியை இராஜினாமா செய்ததாக மேயர் கெய்ஷா லான்ஸ் பொட்டம்ஸ் தெரிவித்தார்.

ப்ரூக்ஸின் உயிரிழப்புக்கு நீதி கோரி அட்லாண்டா வீதிகளில் ஆர்ப்பாட்டக்காரர்கள் வார இறுதியில் ஒன்று திரண்டனர்.

அட்லாண்டாவின் பிரதான நெடுஞ்சாலையை கடந்த சனிக்கிழமை ஆர்ப்பாட்டக்காரர்கள் முடக்கினர். ப்ரூக்ஸ் உயிரிழந்த உணவு விடுதிக்கு வெளியில் ஆர்ப்பாட்டக்காரர்கள் தீமூட்டினர்.

கறுப்பினத்தவரான ஜோர்ஜ் ப்ளொயிட் பொலிஸாரின் பிடியில் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து அமெரிக்கா எங்கும் மூன்று வாரங்களுக்கு மேலாக ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வரும் நிலையிலேயே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

அட்லாண்டா துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புபட்ட கர்ரெட் ரோல்ப் என்ற பொலிஸ் அதிகாரி பணி நீக்கப்பட்டிருப்பதோடு மற்றொரு பொலிஸ் அதிகாரி நிர்வாகப் பணிகளுக்கு இடம்மாற்றப்பட்டுள்ளார்.

இந்நிலையில் மற்றொரு கறுப்பினத்தவரின் மரணம் அமெரிக்காவில் இனவாதத்திற்கு எதிரான போராட்டத்தை மேலும் தீவிரமாக்கியுள்ளது.

Mon, 06/15/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை