சகல பள்ளிவாசல்களும் இன்று மீண்டும் திறப்பு

கூட்டுத் தொழுகை, ஜூம்ஆ தொழுகைக்கு அனுமதியில்லை

சுமார் 3 மாதங்களின் பின்னர் இன்று முதல் பள்ளிவாசல் யாவும் திறக்கப்படுவதோடு கூட்டுத் தொழுகைக்கோ ஜும்ஆ தொழுகைக்கோ இது வரை அனுமதி வழங்கப்படவில்லை என வக்பு சபை அறிவித்துள்ளது.பள்ளிவாசல்களை திறப்பதற்கு முன்னர் கட்டாயம் அந்தந்த பிரதேச பொது சுகாதார பரிசோதகரின் அனுமதியை பெற வேண்டும் என வக்பு சபை தலைவர் சப்ரி ஹலீம்தீன் தெரிவித்தார்.  பள்ளிவாசல்களை மீள திறப்பது தொடர்பில் ஆராய்வதற்காக வக்பு சபை நேற்று பிற்பகல் கூடியது. இந்த கூட்டத்தில் உலமா சபை,சரீஆ கவுன்ஸில் மற்றும் தரீக்கா உயர் சபை என்பவற்றின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டார்கள்.

ஏற்கெனவே வௌியிட்ட பணிபுரைகளையும் சுகாதார தரப்பு வழிகாட்டல்களையும் முழுமையாக பின்பற்றுமாறும் அவர் கோரினார்.

சுகாதார அமைச்சின் இறுக்கமான வழிகாட்டல்களின் அடியொட்டி இலங்கை வக்பு சபை பணிப்புரைகள் முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தினால் அனைத்து பள்ளிவாசல் நிர்வாகிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

இன்று முதல் தனிநபர் தொழுகைக்காக பள்ளிகள் திறக்கப்படுவதோடு ஒரே சமயத்தில் 50 ​பேருக்கு மாத்திரமே அனுமதி வழ ங்கப்பட்டுள்ளது. பள்ளிவாயல்களையும் அதன் வளாகத்தினையும் முழுமையாக சுத்திகரிப்பு செய்ய வேண்டும்.

பள்ளிவாயலினுள் நுளைவதற்கு ஒரு வாயில் மாத்திரம் திறக்கப்படும்.

சுபஹ் தொழுகைக்கான அதானுக்கு 15 நிமிடங்களுக்கு முன்னர் பள்ளிவாயல்கள் திறக்கப்பட்டு தொழுகையைத் தொடர்ந்து 45 நிமிடங்களில் மூடப்படும். மீண்டும் லுஹர் தொழுகைக்கான அதானுக்கு 15 நிமிடங்களுக்கு முன்னர் பள்ளிவாயல் திறக்கப்பட்டு இஷாத் தொழுகையினைத் தொடர்ந்து 45 நிமிடங்களில் மூடப்படும். பள்ளியினுள் இருக்கின்ற போது ஒவ்வொருவரும் முகக் கவசத்தை அணிந்திருப்பதோடு ஒரு மீட்டர் சமூக இடைவெளியையும் பேண வேண்டும்.

ஷம்ஸ் பாஹிம்

Fri, 06/12/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை