உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கும் இஸ்லாத்துக்கும் தொடர்பில்லை

சட்டத்தரணி சுஹைர் அறிக்கை

இஸ்லாமிய போதனைகளுக்கும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கும் சம்பந்தம் இல்லை என்பதை ஆணைக்குழு முன்பான சாட்சியம் உணர்த்தியுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.எம்.சுஹைர் அறிக்ைகயொன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.

இந்தத் தாக்குதலை நடத்திய குண்டுதாரிகள் அதற்கான 13 காரணங்களை அல்லது நியாயங்களைக் கொண்டிருந்தார்கள் என்பது தற்போது சாட்சியங்கள் மூலம்  வெளிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், பயங்கரவாத விசாரணைப் பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் இந்தச் சம்பவம் தொடர்பாக தற்போது விசாரணைகளை நடத்தி வரும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் கடந்த மே மாதம் 29ம் திகதி சாட்சியம் அளிக்கையில் இவற்றை வெளியிட்டுள்ளதாக அறிந்து கொள்ள முடிவதாகவும் சட்டத்தரணி சு​ஹைர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

(முழுமையான அறிக்ைக

4ம் பக்கம்)

Fri, 06/12/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை