ஜெர்மனியில் உள்ள அமெரிக்க துருப்புகளை வாபஸ் பெற திட்டம்

ஜெர்மனியில் உள்ள இராணுவத் தளத்தில் இருந்து 9,500 அமெரிக்க துருப்புகளை வாபஸ் பெறும் திட்டத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உறுதி செய்துள்ளார்.

நேட்டோவுக்கான கொடுப்பனவுகளில் ஜெர்மனி பொறுப்புத் தவறி இருப்பதாக குற்றம் சாட்டும் டிரம்ப், அந்நாடு தமது செயற்பாட்டில் மாற்றத்தை கொண்டுவராவிட்டல் இந்தத் திட்டத்தில் உறுதியாக இருப்பதாக தெரிவித்தார்.

நோட்டோவின் ஐரோப்பிய உறுப்பு நாடுகள் தமது பாதுகாப்பிற்கு மேலும் செலவிட வேண்டும் என்று டிரம்ப் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்.

எனினும் ஜெர்மனியில் இருக்கும் அமெரிக்க துருப்புகள் ஜெர்மனியின் பாதுகாப்பிற்கு நிலைகொள்ளவில்லை என்றும் அது அட்லாண்டில் பாதுகாப்பிற்கே அங்கு இருப்பதாகவும் அமெரிக்காவுக்கான ஜெர்மனி தூதுவர் தெரிவித்துள்ளார்.

 

Wed, 06/17/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை