‘சருமத்தை வெண்மையாக்கும்’ பொருட்களுக்கு கடும் அழுத்தம்

சருமத்தை வெண்மையாக்கும் என்று கூறப்படும் பொருட்களை விநியோகம் செய்யும் முறையை மாற்றி அமைப்பது பற்றி யுனிலிவர் நிறுவனம் ஆராய்ந்து வருவதாகக் கூறப்படுகிறது.

உலகம் முழுவதும் இது போன்ற பொருட்களுக்கு சமூக ஊடகங்களில் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டு வரும் வேளையில், இத்தகவலை ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்தது.

தெற்காசியாவில் வெண்மையான சருமத்தின் மீதுள்ள மோகத்தால், அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ள பொருட்களுக்கு அங்கு பெரிய சந்தை உள்ளது. பல ஆண்டுகளாக விற்பனைக்கு உள்ள ‘பெயார் அன்ட் லவ்லி’ யுனிலிவர் நிறுவனத்தைச் சேர்ந்தது. கடந்த ஆண்டு மட்டும் இந்தியாவில் ‘பெயார் அன்ட் லவ்லி’ சுமார் 500 மில்லியன் டொலருக்கு விற்பனையானது.

பல வாரங்களாக நடந்துவரும் ‘பிளக் லைவ் மெட்டர்’ ஆர்ப்பாட்டங்கள் தொடர்பில், சருமத்தை வெண்மையாக்கும் பொருட்களை விற்பனை செய்யும் ல்ஓரியல், ப்ரொக்டர் அன்ட் கெம்ப்ல் ஆகிய நிறுவனங்களும் குறைகூறப்பட்டன. அவை தோலின் நிறம் சார்ந்த பாகுபாட்டை ஊக்குவிப்பதாக விமர்சிக்கப்பட்டன.

அதையடுத்து, 'சருமத்தை வெண்மைப்படுத்தும்' என்பதுக்கு மாறாக 'சருமப் புத்துணர்ச்சி', 'சருமப் பராமரிப்பு' ஆகிய வார்த்தைகள் பரிசீலிக்கப்படுகின்றன.

ஜோன்சன் அன்ட் ஜோன்சன் நிறுவனம் சருமத்தை வெண்மையாக்கும் என்று கூறும் பொருள்களின் விற்பனையை நிறுத்தப்போவதாக கடந்த மாதம் கூறியது.

Sat, 06/27/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை