எர்னஸ்டோ சேகுவேராவின் பிறந்த இடம் விற்பனைக்கு

ஆர்ஜன்டீனாவின் ரொசாரியோவில் உள்ள 20ஆம் நூற்றாண்டின் இடதுசாரி புரட்சியின் அடையாளமாக இருக்கும் எர்னஸ்டோ சேகுவேரா பிறந்த இடம் விற்பனைக்கு விடப்பட்டுள்ளது.

நகர மையத்தில் இருக்கும் சேகுவேரா பிறந்த 240 சதுர மீற்றர் கொண்ட அடிக்குமாடிக் கட்டடத்தின் தற்போதைய உரிமையாளர் பிரான்சிஸ்கோ பருக்கியா 2002 ஆம் ஆண்டு அதனை வாங்கி இருந்தார்.

அதனை ஒரு கலாசார மையமாக மாற்ற விரும்புவதாக அவர் கூறியபோதும் அது செயற்படுத்தப்படவில்லை. இந்நிலையில் அதனை விற்க முன்வந்திருக்கும் அவர் அதற்காக நிர்ணிக்கப்பட்டிருக்கும் விலை பற்றி குறிப்பிடவில்லை.

இந்த கட்டடம் உருகுவே முன்னாள் ஜனாதிபதி ஜேஸ் பெபே முஜிக்கா மற்றும் கியூப புரட்சித் தலைவர் பிடெல் காஸ்ட்ரோ போன்ற புகழ் பெற்றவர்கள் வருகை தந்த இடமாகவும் உள்ளது.

சேகுவேரா 1928 இல் பணக்கார நடுத்தர குடும்பம் ஒன்றில் பிறந்தபோதும், தெற்கு அமெரிக்காவின் வறுமை மற்றும் பட்டினி அவரை புரட்சியாளராக மாற்றியது.

சர்வாதிகாரி புல்கென்சியோ படிஸ்டாவை வீழ்த்திய 1953–59 கியூபப் புர ட்சியில் அவர் முக்கிய பங்கு வகித்தார்.

சேகுவேரா தமது புரட்சி சிந்தனையை தென் அமெரிக்கா மற்றும் ஏனைய அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் பரப்பினார்.

Sat, 06/27/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை