நீருக்கடியிலான கேபிளிலும் சீனா – அமெரிக்கா பதற்றம்

சீனா தரவுகளை திருடும் என்ற அச்சத்தில் ஹொங்கொங் மற்றும் அமெரிக்காவை இணைக்கும் நீருக்கு அடியிலான தரவுக் கேபிள் திட்டத்தை அமெரிக்க அரசு நிராகரித்துள்ளது.

இணையதள வேகம் மற்றும் திறனை அதிகரிக்கும் வகையில் கூகுள் மற்றும் பேஸ்புக் ஆதரவுடனேயே பசிபிக் இலகு கேபிள் வலையமைப்பு என்ற இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

எனினும் ‘தொலைத்தொடர்பு குழு’ என்று அழைக்கப்படும் அமெரிக்க அரசின் குழு ஒன்று இந்தத் திட்டத்தை நிராகரிக்க பரிந்துரைத்துள்ளது. இந்த முடிவு ஏற்கனவே வர்த்தகப் போரில் ஈடுபட்டிருக்கும் அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையிலான மற்றொரு பதற்றத்திற்கு வித்திட்டுள்ளது.

இவ்வாறான கேபிள் திட்டம் ஒன்றை தேசிய பாதுகாப்பை காரணம் காட்டி நிராகரித்திருப்பது இது முதல் முறையாகும்.

Fri, 06/19/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை