உலகில் இடம்பெயர்ந்தோர் 80 மில்லியனை நெருங்கியது

வன்முறை, பாகுபாடு மற்றும் மனித உரிமை மீறல்கள் காரணமாக கடந்த ஆண்டு முடிவில் உலகெங்கும் வலுக்கட்டாயமாக இடம்பெயர்ந்தவர்கள் எண்ணிக்கை 80 மில்லியனை நெருங்கியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

வரும் ஜூன் 20 ஆம் திகதி அனுசரிக்கப்படவிருக்கும் உலக அகதிகள் தினத்தை முன்னிட்டு, அகதிகளுக்கான ஐ.நா நிறுவனம் வெளியிட்ட அறிக்கையிலேயே இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் 2019 இல் மேலும் 11 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்திருப்பதோடு இது கடந்த தசாப்தத்தின் மொத்த எண்ணிக்கையை விடவும் இரட்டிப்பாகும்.

மொத்தம் 79.5 மில்லியன் பேர் உலகெங்கும் இடம்பெயர்ந்திருப்பதோடு, 26 மில்லியன் பேர் அகதிகளாகவும், 4.2 மில்லியன் பேர் புகலிடக் கோரிக்கையாளர்களாகவும், 45.7 மில்லியன் பேர் உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்தவர்களாக இருப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

உலகெங்கும் இடம்பெயர்ந்தவர்களில் ஆறில் ஒரு பங்கினர் யுத்தம் நிலவும் யெமன் மற்றும் சிரியா அதேபோன்று கொங்கோ நாடுகளைச் சேர்ந்தவர்களாக உள்ளனர்.

Fri, 06/19/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை