கறுப்பினத்தவரை கொன்ற அதிகாரி மீது குற்றச்சாட்டு

அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் கடந்த வாரம் கறுப்பின ஆடவரைச் சுட்டுக்கொன்ற பொலிஸ் அதிகாரி மீது கொலை, தாக்குதல் உள்ளிட்ட 11 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அவை நிரூபிக்கப்பட்டால் காரெட் ரோல்ப் எனும் பொலிஸ் அதிகாரிக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம்.

ரேஷார்ட் புரூக்ஸ் என்ற கறுப்பின ஆடவர் தப்பியோடியபோது பொலிஸ் அதிகாரி காரெட் அவரைச் சுட்டார். அப்போது சம்பவ இடத்திலிருந்த டெவின் புரோஸ்னன் என்பவர் இந்த வழக்கின் சாட்சியாக விசாரிக்கப்படுவார் என்று அதிகாரிகள் கூறினர்.

பொலிஸ் அதிகாரி கறுப்பின ஆடவரைக் கொன்றதன் தொடர்பில் அமெரிக்கா முழுவதும் போராட்டம் நடத்தப்படும் வேளையில் அதிகாரி மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பொலிஸ் சட்டத்தில் சீர்திருத்தம் கொண்டு வருவதன் தொடர்பில் அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர்கள் தற்போது விவாதித்து வருகின்றனர்.

Fri, 06/19/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை