கருணா மீதான விசாரணை நடவடிக்கை; புனர்வாழ்வு பெற்ற புலிகள் கலக்கத்தில்

பிற்காலத்தில் துரோகம் இழைத்திருந்தாலும் இயக்கத்தில் இருந்தவர்- கருணா

கருணாவுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது என்பது புனர்வாழ்வு பெற்ற, பெறாத அல்லது ஆயுதப்போராட்டத்துக்கு ஆதரவளித்த எல்லோருடைய மனங்களையும் கலங்கடிக்கும் நிலையை ஏற்படுத்தியுள்ளதாக ஈழத்தமிழர் சுயாட்சி கழகத்தின் தலைவியும் முன்னாள் வட மாகாண சபையின் உறுப்பினருமான அனந்தி சசிதரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியாளர்கள் சந்திப்பில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், மக்களை பாதுகாக்கவே புலிகள் ஆயுதங்களை ஏந்தினார்கள் பாதுகாப்பு படைக்கு எதிராக யுத்தத்தை நடத்தினார்கள்.  கடந்த காலத்தில் இராணுவத்தை கொன்றதற்காக தற்போது நடவடிக்கை எடுப்பது என்பது பிழையான ஒன்று எனவும் கருணாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோருவது தமிழ் இனம் தன்னை பாதுகாப்பதற்காக நடத்திய ஆயுதப் போராட்டத்தை பிழையாக காட்டுவதாகும் என்றார்.

கருணா கடந்த காலங்களில் விடுதலைப்புலிகள் அமைப்பின் ஒரு தளபதியாக இருந்தார். அவருடைய துரோகம் ஒரு இனம் அழிவதற்கு வழிகோலிவிட்டது. அதில் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை.ஆனால் விடுதலைப் புலிகளின் காலத்தில் கருணா தளபதியாக இருந்து, 3000 இராணுவத்தை கொன்றேன் என கூறியதற்கு நடவடிக்கை எடுப்பது என்பது ஒரு இனம் தன்னை பாதுகாப்பதற்கு ஆயுதம் ஏந்தியதை பிழையாக காட்டுவதாக இருக்கும்.

 

Wed, 06/24/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை