கொரோனா வைரஸ் தாக்கம் குறித்து சிலர் அலட்சியமான செயற்பாட்டில்

சுகாதார முறைகளை பின்பற்றாவிடின் ஆபத்து காத்திருக்கிறது − அனில்

கொரோனா வைரஸ் தாக்கம் குறித்து அலட்சியமாக செயற்படும் நபர்களால் கொரோனா இரண்டாவது சுற்று ஆபத்து உருவாகலாமென சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றாவிட்டால், எந்தநேரத்திலும் ஆபத்து உருவாகலாமெனவும் சுட்டிக் காட்டினார். கொரோனா வைரஸ் பரவல் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது,

இலங்கையில் சிலர் வைரஸினால் ஏற்படக்கூடிய ஆபத்தை அலட்சியம் செய்கின்றனர். அந்த வகையில் இலங்கை இரண்டாவது சுற்று வைரஸ் தாக்கத்தினை கட்டுப்படுத்த வேண்டுமென்றால், உலக சுகாதார ஸ்தாபனமும் சுகாதார அமைச்சும் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டியது மிகவும் அவசியமாகும். மேலும் வைரஸ் பரவுதலை ஆரம்ப கட்டத்திலேயே முறியடித்துவிட்டது. எனினும் எந்த நேரத்திலும் இரண்டாவது சுற்று ஆபத்து தலைதூக்கலாம் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Sat, 06/20/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை