கொரோனாவை கட்டுப்படுத்திய ஜனாதிபதிக்கு சீனா பாராட்டு

இலங்கையில் கொவிட் 19 நோய்த் தொற்றை கட்டுப்படுத்தியமைக்கு சீன ஜனாதிபதி ஷீ ஜிங் பிங் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பதில் சீனத் தூதுவர் ஹூவை நேற்று முன்தினம் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்தார். இன்று 20ஆம் திகதி ஜனாதிபதியின் பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்து சீன ஜனாதிபதி ஷீ ஜிங் பிங் அனுப்பியுள்ள கடிதத்தை பதில் தூதுவர் ஜனாதிபதியிடம் வழங்கினார்.

இலங்கையில் வைரசை கட்டுப்படுத்துவதற்கு பங்களிப்பு செய்யும் வகையில் சீன அரசு மருத்துவ உதவிப் பொருட்களை அனுப்பி வைத்துள்ளது. அவை சுகாதார அமைச்சுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதுடன், நிவாரண உதவிகள்  அடங்கிய பட்டியல் பதில் தூதுவரினால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது.

நெருக்கடிக்குள்ளான இச்சந்தர்ப்பத்தில் இலங்கைக்கு உதவியமை தொடர்பாக கோட்டாபய ராஜபக்ஷ, சீன ஜனாதிபதி க்கும் சீன மக்கள் மற்றும் சீன நிறுவனத்திற்கும் தனது நன்றிகளை தெரிவித்தார். சீனா மற்றும் இலங்கை கொவிட் 19 தொற்றுக்குள்ளானவர்களை இனங்காணுவதற்காக ஒரே மாதிரியான வழிமுறைகளை பின்பற்றியுள்ளதென சீனத் தூதுக்குழு குறிப்பிட்டது. இந்நெருக்கடியை சிறப்பாக கட்டுப்படுத்துவதற்கு இரு நாட்டினதும் பாதுகாப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினரின் அர்ப்பணிப்பே காரணமாகும் என்றும் தூதுக்குழு குறிப்பிட்டது. இருதரப்பினரும் மேலும் பல துறைசார் விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடினர். சீனாவின் தேயிலை ஏல விற்பனை, உலகின் சிறந்த தேயிலை என பிரசித்தி பெற்றுள்ள இலங்கை தேயிலையை சீனாவில் பிரபல்யப்படுத்துதல் தொடர்பாகவும் அவதானத்தை செலுத்தியது. இலங்கையில் சீன முதலீடு மற்றும் இருநாடுகளுக்குமிடையிலான நிதியுதவிகளை அதிகப்படுத்துவது பற்றியும் இதன்போது கலந்துரையாடினர்.

 

Sat, 06/20/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை