அமெரிக்க இனவாதம் குறித்து ஐ.நா பேரவையில் விவாதம்

அமெரிக்காவில் “திட்டமிடப்பட்ட இனவாதம், பொலிஸ் அடக்குமுறை மற்றும் அமைதியான ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான அத்துமீறல்கள்” தொடர்பான குற்றச்சாட்டுகள் பற்றி ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நாளை அவசர விவாதம் நடத்தப்படவுள்ளது.

ஆபிரிக்க நாடுகள் சார்பில் புர்கினா பாசோ மேற்கொண்ட பரிந்துரைக்கு அமைய இந்த விவாதம் நடத்தப்படுவதாக ஐ.நா மனித உரிமைகள் பேரவை குறிப்பிட்டுள்ளது. ஜெனீவாவில் இயங்கும் 47 நாடுகளைக் கொண்ட இந்த அமைப்பில் அமெரிக்கா அங்கத்துவம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

“துரதிருஷ்டவசமாக ஜோர்ஜ் பிளொயிட்டின் மரணம் ஒரு தனித்த நிகழ்வு இல்லை” என்று அந்தக் கோரிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆபிரிக்க அமெரிக்கரான பிளோயிட் கடந்த மே 25 ஆம் திகதி அமெரிக்காவின் மின்னிகாபொலிஸ் நகரில் பொலிஸாரின் பிடியில் வைத்து உயிரிழந்த சம்பவம் இனவாத எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை தூண்டியுள்ளது.

 

Tue, 06/16/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை