ஆப்கானில் ஒரு வாரத்திற்குள் 422 தாக்குதல்களை நடத்திய தலிபான்

தலிபான்களின் தாக்குதல்களில் கடந்த ஒரு வாரத்திற்குள் 400க்கும் அதிகமான ஆப்கான் பாதுகாப்பு படையினர் கொல்லப்பட்டு அல்லது காயமடைந்திருப்பதாக அந்நாட்டு உள்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது. அமைதி முயற்சிக்கான எதிர்பார்ப்புக்கு மத்தியில் தலிபான்கள் தமது தாக்குதல்களை அதிகரித்திருப்பதாக அது குறிப்பிட்டுள்ளது.

நோன்புப் பெருநாளை ஒட்டி ஆப்கானில் மூன்று நாள் யுத்த நிறுத்தம் ஒன்றை தலிபான்கள் அறிவித்ததை அடுத்து அங்கு வன்முறைகள் குறைந்து காணப்பட்டன.

இந்நிலையில் அண்மைய தினங்களில் தாக்குதல்கள் அதிகரித்திருப்பதாக அதிகாரிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

“கடந்த ஒரு வாரத்தில் பாதுகாப்பு படையினர் மீது தலிபான்கள் 222 தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இதன் விளைவாக 422 பேர் உயிரிழந்து அல்லது காயமடைந்துள்ளனர்” என்று உள்துறை அமைச்சின் பேச்சாளர் தாரிக் எரியன் ஞாயிறன்று நடந்த செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் தெரிவித்தார்.

Tue, 06/16/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை